News May 15, 2024

தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து குழந்தை பலி

image

கே.வி.குப்பத்தை அடுத்த லத்தேரியைச் சேர்ந்த துரைராஜ் என்பவரது குழந்தை சுஷ்மிதா (1). நேற்று (மே 14) குழந்தை சுஷ்மிதா விளையாடிக் கொண்டிருந்தபோது தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்தது. அவரை மீட்டு சிகிச்சைக்காக குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து லத்தேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்துகின்றனர்.

Similar News

News July 11, 2025

ரூ.15 லட்சம் வரை விபத்து காப்பீடு 2/2

image

▶18-65 வயதுக்கு உட்பட்டவர்கள் இந்த காப்பீடை பெறலாம்.
▶ஆப்ஷன் 1 – ரூ.5 லட்சம் காப்பீடுக்கு வருடம் ரூ.355 கட்டினால் போதும்.
▶ஆப்ஷன் 2 – ரூ.10 லட்சம் காப்பீடுக்கு வருடம் ரூ.555கட்டினால் போதும்.
▶ஆப்ஷன் 3- ரூ.15 லட்சம் காப்பீடுக்கு வருடம் ரூ.755 கட்டினால் போதும்.
▶இந்த <>லிங்கில் <<>>வேலூரில் உள்ள அனைத்து போஸ்ட் ஆபிஸ் முகவரி மற்றும் தொடர்பு எண்களும் உள்ளன. அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க

News July 11, 2025

ரூ.15 லட்சம் வரை விபத்து காப்பீடு 1/2

image

இந்திய போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி, புதிய விபத்து காப்பீடு திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த காப்பீடு, ரூ.10 லட்சம், ரூ.15 லட்சம் வரையிலான செலவுகளை கவர் செய்யக்கூடியது. விபத்தில் உயிரிழந்தால் 100% காப்பீடு தொகை வழங்கப்படும். விபத்தில் எலும்புமுறிவு ஏற்பட்டால் ரூ.25,000 வழங்கப்படும். இந்த பாலிசி குறித்து தெரிந்து கொள்ள வேலூர் அதிகாரிகளை (0416-2232549, 0416-2223908) தொடர்பு கொள்ளுங்கள். <<17027997>>தொடர்ச்சி<<>>

News July 11, 2025

சென்னை – வேலூர் 1 மணி நேரத்தில் செல்லலாம்

image

சென்னை – வேலூருக்கு இடையே (140 கி.மீ.) RRTS ரயில் சேவையை கொண்டு வர தமிழக அரசு முடிவெடுத்துள்ளது. ‘பாலாஜி ரயில் ரோடு’ என்ற நிறுவனத்திடம் சாத்தியக்கூறுகள் தயாரிப்பதற்கு ஆணை வழங்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டால், சென்னையில் இருந்து காஞ்சிபுரத்திற்கு 20 நிமிடத்திலும், வேலூருக்கு 1 மணி நேரத்திலும் பயணிக்கலாம். மெட்ரோவைவிட 3 மடங்கு அதாவது 180 கி.மீ. வேகத்தில் செல்லும். ஷேர் பண்ணுங்க

error: Content is protected !!