News May 15, 2024

மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டி

image

கன்னியாகுமரி, தென்தாமரைகுளம் பகுதியில் மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் மாவட்டம் முழுவதிலும் இருந்து 32 அணிகள் பங்கேற்றன. நேற்று நடைப்பெற்ற இறுதி போட்டியில் கன்னியாகுமரி சீ பேர்ட்ஸ் அணி முதலிடம் பெற்றது. இரண்டாவது இடத்தை புதுக்கிராமம் அணியும், மூன்றாவது இடத்தை நாகர்கோவில் இந்துக்கல்லூரி அணியும் பெற்றது. போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசு வழங்கப்பட்டது.

Similar News

News March 12, 2026

குமரி: பத்மநாபபுரம் தொகுதியில் முந்துவது யார்?

image

குமரி மாவட்டம் பத்மநாபபுரம் தொகுதியில் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது . அமைச்சர் மனோ தங்கராஜின் தொகுதியான இது, கடந்த 2006 முதல் திமுகவின் வசம் உள்ளது. அதேசமயம், இத்தொகுதியில் கணிசமான வாக்குகளை கொண்டுள்ள பாஜக, தமிழக சட்டமன்ற வரலாற்றில் 1996 தேர்தலில் முதலில் கால்பதித்து இங்குதான். இந்த முறை அதிமுக-பாஜக கைகோர்த்திருக்கும் சூழலில், தவெகவும் களமிறங்குவது வெற்றி யாருக்கு என்ற கேள்வியை எழுப்பி உள்ளது.

News March 12, 2026

குமரி: தொழிலாளி நீரில் மூழ்கி பலி

image

கன்னியாகுமரி மாவட்டம் அருமனை அருகே சிதறால், துண்டத்துவிளை பகுதியில் தாமிரபரணி ஆற்றில் சிப்பி எடுக்க சென்ற கூலி தொழிலாளி ஜஸ்டஸ்குமார் நேற்று முன்தினம் இரவு மாயமானார். இந்நிலையில் நேற்று காலை முதல் குழித்தை தீயணைப்பு துறையினர், அருமனை போலீசார் தீவிரமாக தேடி வந்த நிலையில், ஜஸ்டஸ்குமார் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

News March 12, 2026

பைக்கை திருடி செல்லும் சிசிடிவி காட்சி வைரல்

image

இரணியல் கிழக்கு தெரு பகுதியை சேர்ந்தவர் சுப்ரமணிய பிள்ளை. இவர் கடந்த வாரம் அவரது பைக்கை இரணியல் பிள்ளையார் கோவில் அருகில் நிறுத்தி வைத்திருந்தார். அப்போது அங்கு வந்த மர்ம நபர் பைக்கை நைசாக திருடி சென்றுள்ளார். மர்ம நபர் பைக்கை திருடி செல்லும் சிசிடிவி காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதன் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

error: Content is protected !!