News May 15, 2024
UPDATE: மெட்ரோ சேவை நாள் முழுவதும் ரத்து

மீனம்பாக்கம்- விமான நிலையம் இடையே ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறால் நீல வழித்தடத்தில் சென்ட்ரல்- விமான நிலையம் நேரடி மெட்ரோ ரயில் சேவை நாள் முழுவதும் ரத்து செய்யப்படுவதாக மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும், விமான நிலையம் செல்ல, ஆலந்தூர் சென்று பச்சை வழித்தடத்தில் செல்லலாம். விம்கோ நகர்- விமான நிலையம், சென்ட்ரல்-பரங்கிமலை இடையே மெட்ரோ ரயில் சேவை வழக்கம் போல் இயங்கும்.
Similar News
News November 22, 2025
சென்னையில் இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை!

சென்னை கொளத்தூர் சேர்ந்த 23 வயது பெண், கடந்த 19ம் தேதியன்று இரவு புழல் செக்ரடேரியட் காலனி பகுதியில் நடந்து சென்றபோது, அடையாளம் தெரியாத நபர் இருசக்கர வாகனத்தில் வந்து பாலியல் சீண்டலில் ஈடுபட்டு தப்பினார். புகாரின் பேரில் M-3 புழல் காவல் நிலையம் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டது. சிசிடிவி பதிவுகள் மூலம் 15 வயது சிறுவனை கைது செய்து, நேற்று சிறார் நீதிக்குழுமத்தில் ஆஜர்படுத்தினர்.
News November 22, 2025
சென்னையில் நாளை மின்சார ரயில்கள் ரத்து!

சென்னை, நாளை (நவ.23) திருநின்றவூர் ரயில்வே பணிமனையில் பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளது. இதனால் காலை 7-மாலை 3.40 வரையில், சென்னை கடற்கரையில் இருந்து காலை 5.40, 6.10, 9.55, மதியம் 1.5 ஆகிய நேரங்களில் திருவள்ளூர் செல்லும் மின்சார ரயிலும், கடற்கரையில் இருந்து 2.25க்கு திருத்தணி செல்லும் மின்சார ரயிலும், சென்டிரலில் இருந்து காலை 6.50-2.40 வரை திருவள்ளூர் செல்லும் மின்சார ரயில் ரத்து செய்யப்படுகிறது.
News November 22, 2025
சென்னையில் உயரப்போகும் குடிநீர் கட்டணம்!

சென்னை மக்களுக்கு தினமும் 1,300 மில்லியன் லிட்டர் குடிநீர் விநியோகிக்கப்படுகிறது. கட்டணமாக, சாதாரண வீடுகளில் ரூ.105ம், அடுக்குமாடிகளில் ரூ.200ம் வசூலிக்கப்படுகிறது. இந்நிலையில், குடிநீர் பயன்பாட்டுக்கு ஏற்றவாறு கட்டணம் நிர்ணயிக்க கடந்த ஜூன் மாதம் CMWSSB டெண்டர் அறிவித்து, இறுதி பணிகள் எட்டியுள்ளது. முதலில் 2,400 ச.அ.க்கு அதிகமுள்ள அடுக்குமாடிகளில் ஸ்மார்ட் மீட்டர் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது.


