News May 15, 2024
மொத்த விலை பணவீக்கம் மீண்டும் உயர்ந்தது

இந்தியாவின் சில்லரை பணவீக்கம் சற்று குறைந்த நிலையில் மொத்த விலை பணவீக்கம் தாறுமாறாக உயர்ந்துள்ளது. ஏப்ரல் மாதத்தில் மொத்தவிலை பணவீக்கம் 1.26 சதவீதமாக பதிவாகியுள்ளது. மார்ச் மாதத்தில் இது வெறும் 0.53 சதவீதமாக இருந்தது. கொரோனாவுக்கு பின் தொடர்ந்து உயர்ந்துவந்த பணவீக்கம் சமீபமாக குறைந்துவந்த நிலையில் தற்போது மீண்டும் உயர்ந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Similar News
News March 17, 2026
திமுக கூட்டணியில் தொடரும் இழுபறி

திமுக – சிபிஎம் இடையில் இன்று நடைபெற்ற 3-ம் கட்ட தொகுதிப் பங்கீட்டு பேச்சுவார்த்தையிலும் முடிவு எட்டப்படவில்லை. இதுகுறித்து பேசிய பெ.சண்முகம், கடந்த தேர்தலை ( 6 தொகுதிகள்) விட, கூடுதல் இடங்கள் ஒதுக்கப்பட வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளதாக கூறினார். மேலும், திமுக கூட்டணிக்கு புதிய கட்சிகள் வந்திருப்பதால், பேச்சுவார்த்தை இன்னும் முடியவில்லை; விரைவில் நல்ல முடிவு கிடைக்கும் என்றார்.
News March 17, 2026
வீட்டில் தங்க நகை இருக்குதா.. எச்சரிக்கை

TN-ல் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. இதனால், வீட்டில் அதிகளவில் தங்கம் வைத்திருந்தால் சிக்கல் எழுமா என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். வருமான வரி விதிப்படி, திருமணமான பெண்கள் 500 கிராம், திருமணம் ஆகாத பெண்கள் 250 கிராம், ஆண்கள் 100 கிராம் வரை ஆவணங்களின்றி தங்கத்தை வீட்டில் வைத்துக் கொள்ளலாம். இந்த அளவுக்கு மேல் வீட்டில் தங்கம் வைத்திருந்தால், ரெய்டு வந்தால் பறிமுதல் செய்யப்படும்.
News March 17, 2026
ரஜினி பதிவில் முற்றுப்புள்ளி.. முட்டிமோதும் ரசிகர்கள்

ரஜினிகாந்த் பற்றி ஆதவ் அர்ஜுனா பேசியதற்கு <<19405631>>ரஜினி<<>> பதிலடி கொடுத்திருந்தார். இதில் கவனிக்கத்தக்க வகையில், தனது X பக்கத்தில், ‘ . ‘ என்று மட்டும் குறிப்பிட்டு அறிக்கையை ரஜினி வெளியிட்டிருந்தார். இதனை பகிர்ந்துவரும் அவரது ரசிகர்கள், ‘தலைவர் சம்பவம் வேற மாதிரி’ என கூறி வருகின்றனர். முன்னதாக, அடுத்த சூப்பர் ஸ்டார், காக்கா – கழுகு கதை என ரஜினி – விஜய் ரசிகர்கள் மோதியுள்ளனர் என்பது கவனிக்கத்தக்கது.


