News March 15, 2026
இரவில் நிம்மதியாக தூங்க உதவும் 10-3-2-1 விதி!

இரவில் நிம்மதியாக தூங்க 10- 3- 2- 1 விதியை ட்ரை பண்ணுங்க ➤தூங்குவதற்கு 10 மணி நேரத்துக்கு முன் காபி, டீ போன்ற காஃபின் பானங்கள் குடிப்பதை நிறுத்துங்கள் ➤தூங்குவதற்கு 3 மணி நேரத்துக்கு முன் உணவு சாப்பிட்டு முடியுங்கள் ➤மன நிம்மதியாக தூங்க, வேலைகள் அனைத்தையும் தூங்குவதற்கு 2 மணி நேரத்திற்கு முன்பாகவே முடியுங்கள். ➤தூங்குவதற்கு 1 மணி நேரத்திற்கு முன், டிஜிட்டல் சாதனங்கள் பயன்பாட்டை தவிருங்கள். SHARE.
Similar News
News March 25, 2026
ஆணவ கொலைக்கு எதிரான மசோதா நிறைவேறியது!

கர்நாடக சட்டமன்றத்தில் ஆணவ கொலைக்கு எதிரான <<19396830>>’இவா நம்மவா’ மசோதா<<>> நிறைவேறியுள்ளது. சாதி கடந்த திருமணம் செய்யும் தம்பதிகளுக்கு போலீஸ் பாதுகாப்பும், உள்ளூர் நிர்வாகத்தின் ஆதரவும் தேவை என்பதை இந்த மசோதா அங்கீகரித்துள்ளது. இத்தகைய ஒரு சட்டம் தேவையில்லை என்ற பாஜக MLA-க்களின் எதிர்ப்பையும் மீறி ஒருமனதாக மசோதா நிறைவேறியது. இதன்மூலம் ஆணவ கொலை செய்வோருக்கு குறைந்தபட்சம் 5 ஆண்டு சிறை தண்டனை உறுதியாகியுள்ளது.
News March 25, 2026
அதிருப்தியில் இருக்கிறாரா பூவை ஜெகன்மூர்த்தி?

NDA கூட்டணியில் புரட்சி பாரதம் கட்சிக்கு KV குப்பம் தொகுதியை அதிமுக ஒதுக்கியுள்ளது. இந்நிலையில், நாங்கள் எதிர்பார்த்தது வேறு, இன்று நடந்தது வேறு என்று அக்கட்சியின் தலைவர் பூவை ஜெகன்மூர்த்தி அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். இதுதொடர்பாக, நாளை கட்சியின் நிர்வாகக் குழுவை கூட்டி நிர்வாகிகளுடன் ஆலோசித்து முக்கிய முடிவை எடுக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். <<-se>>#TNElection2026<<>>
News March 25, 2026
4 நாள்கள் விடுமுறை: வேட்புமனு பற்றி முக்கிய அறிவிப்பு

TN தேர்தலில் வேட்புமனு தாக்கல் செய்ய 4 நாள்கள் மட்டுமே அவகாசம் அளிக்கப்படும் என ECI அறிவித்துள்ளது. மார்ச் 30 – ஏப்.6 வரை வேட்புமனு தாக்கல் நடைபெறுகிறது. இதில், மார்ச் 31 (செவ்வாய்), ஏப்.1 (புதன்), ஏப்.3 (வெள்ளி), ஏப்.5 (ஞாயிறு) விடுமுறை என்றும், மற்ற 4 நாள்களில் (மார்ச் 30, ஏப். 2, 4, 6) வேட்புமனு தாக்கல் செய்யவும் அறிவுறுத்தியுள்ளது. முன்னதாக <<19396196>>3 நாள் மட்டுமே<<>> விடுமுறை என தெரிவிக்கப்பட்டிருந்தது.


