News May 15, 2024

விழுப்புரம்: ஆதிதிராவிடர் பள்ளி 100% தேர்ச்சி!

image

11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நேற்று வெளியாகின. விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த சிங்கனூர் அரசு ஆதிதிராவிட நல மேல்நிலைப் பள்ளியில் 100% மாணவர்கள் தேர்ச்சி அடைந்தனர். இதையடுத்து தலைமை ஆசிரியை மணிமேகலை மாணவர்களையும், அதற்கு உறுதுணையாக இருந்த ஆசிரியர்களையும் வெகுவாகப் பாராட்டினார்.

Similar News

News July 5, 2025

திண்டிவனம் அரசு மருத்துவமனை சாதனை

image

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் மாற்றுத்திறனாளி சான்றிதழ் பெற சென்ற சிறுமி கோமதி (17) அவருக்கு கையின் எலும்பு வளர்ச்சி குன்றி இருந்தது. அதனை அறுவை சிகிச்சை செய்து 140 நாட்களில் 14 செ.மீ வளர செய்து திண்டிவனம் அரசு மருத்துவர்கள் சுரேஷ் மற்றும் மருத்துவ குழுவினர்கள் சாதனை படைத்துள்ளனர். அவர்களுக்கு பல்வேறு தரப்பிலிருந்தும் பாராட்டு குவிந்து வருகிறது.

News July 5, 2025

விழுப்புரம் நகரில் விளம்பர பதாகை வைக்க கட்டுப்பாடு

image

விழுப்புரம் நகரில் விளம்பர பதாகைகள் வைப்பது குறித்த கட்டுப்பாடுகள் பற்றி காவல்துறை சார்பில் இன்று (ஜூலை 5, 2025) அனைத்து கட்சி ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. விழுப்புரம் காவலர் திருமண மண்டபத்தில் நடைபெற்ற இக்கூட்டத்திற்கு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு தினகரன் தலைமை தாங்கினார். உதவி போலீஸ் சூப்பிரண்டு ரவிந்திரகுமார் குப்தா மற்றும் நகராட்சி ஆணையர் வசந்தி ஆகியோர் இதில் பங்கேற்றனர்.

News July 5, 2025

பத்திரம் தொலைந்தால் கவலை வேண்டாம்

image

நிலம்/வீட்டின் பத்திரம் தொலைந்து விட்டால் கவலையே வேண்டாம். தாலுகா அலுவலகம் செல்லாமலே வீட்டில் இருந்தபடியே இந்த <>லிங்க்<<>> மூலம் விண்ணப்பித்து பத்திர நகலை பெற முடியும். பத்திரம் மட்டுமல்லாமல் உங்கள் சொத்து பற்றிய பட்டா, வில்லங்க சான்றிதழ் போன்ற விபரங்களையும் இதில் பெற முடியும். மேலும் தகவலுக்கு (9498452110) & மாவட்ட பதிவாளர் அலுவலகத்தை (04146-222938) அழைக்கலாம். *அனைவருக்கும் பகிரவும்*

error: Content is protected !!