News March 15, 2026

பயிரை மேய்ந்த வேலி: அன்புமணி ஆவேசம்

image

<<19388010>>SP அந்தஸ்து அதிகாரியே<<>> பெண் காவலருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததன் மூலம் TN-ல் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்பது உறுதியாகியுள்ளதாக அன்புமணி விமர்சித்துள்ளார். வேலியே பயிரை மேய்ந்த கதையாக பாதுகாப்பு கொடுக்க வேண்டிய போலீசாரே இப்படி நடந்து கொண்டுள்ளது பெண்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். சிறுமிகள் முதல் மூதாட்டிகள் வரை யாருக்கும் பாதுகாப்பு இல்லை என்றும் சாடியுள்ளார்.

Similar News

News April 13, 2026

பிறந்த நாளிலேயே அடக்கம் செய்யப்பட்ட நடிகையின் உடல்

image

சீரியல் நடிகை சுபாஷினியின் மரணம் குறித்து உருக்கமான தகவல் வெளியாகியுள்ளது. பிறந்த நாளிலேயே (ஏப்.12) அவரது <<19638476>>உடல் அடக்கம் <<>>செய்யப்பட்டிருக்கிறது. வழக்கமாக குடும்பத்தினருக்கு மகிழ்ச்சியை கொடுக்கும் நாள், இந்தாண்டு சோகமான நாளாக மாறியுள்ளது. அதுமட்டுமின்றி, ஏப்.21-ம் தேதி அவருக்கு கல்யாண நாளாகும். சுபாஷினிக்கு மகிழ்ச்சிகரமான மாதமாக இருந்த ஏப்ரல், தற்போது குடும்பத்தினருக்கு பேரிடியாக அமைந்திருக்கிறது.

News April 13, 2026

பெட்ரோல், டீசல் விலை உயரும்… புதிய தகவல்

image

அமெரிக்க-ஈரான் பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததை அடுத்து, கச்சா எண்ணெய் விலை மீண்டும் பேரலுக்கு $100-ஐ தாண்டியுள்ளது. ஹார்முஸ் நீரிணை முற்றுகையிடப்பட்டால், கச்சா எண்ணெய் விலை $150-ஐ எட்டக்கூடும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். <<19636592>>டிரம்ப் அறிவிப்பு<<>> நடந்தால், தினசரி 12 மில்லியன் பேரல் கச்சா எண்ணெய் விநியோகம் பாதிக்கும். இதனால் உலகம் முழுவதும் பெட்ரோல், டீசல், கேஸ் விலை உயரும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.

News April 13, 2026

மீண்டும் படம் நடிக்க திட்டமிட்டுள்ளாரா விஜய்?

image

விஜய்யின் கடைசி படம் என சொல்லப்பட்ட ‘ஜன நாயகன்’ லீக்கானதால் தயாரிப்பு நிறுவனம் நஷ்டத்தை சந்தித்துள்ளது. இதனை ஈடுகட்டும் வகையில், அந்நிறுவனத்திற்காக புதிய படம் ஒன்றில் நடிக்க விஜய் திட்டமிட்டுள்ளாராம். இதனை நெல்சன், அட்லீ, லோகேஷ் ஆகியோரில் ஒருவர் இயக்க வாய்ப்பிருப்பதாகவும், இதுவே விஜய்யின் கடைசி படமாக இருக்கும் எனவும் கூறப்படுகிறது. எனினும், இதுகுறித்து அதிகாரப்பூர்வமாக இன்னும் அறிவிக்கப்படவில்லை.

error: Content is protected !!