News May 15, 2024
திண்டுக்கல்: இளைஞருக்கு 20 ஆண்டு ஜெயில்

திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், 2023ம் ஆண்டு சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்த வேடசந்தூர் ஆத்துமேடு பகுதியை சேர்ந்த மதன்குமார்(22) என்பவரை போக்சோ வழக்கில் கைது செய்தனர். இவ்வழக்கு திண்டுக்கல் சிறப்பு போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் நேற்று(மே 14) மதன்குமாருக்கு 20 ஆண்டு சிறை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.
Similar News
News March 13, 2026
திண்டுக்கல் சீனிவாசனை வீழ்த்தப் திமுக மாஸ்டர் பிளான்?

திண்டுக்கல்லில், முன்னாள் அமைச்சர் சீனிவாசனை வீழ்த்த திமுக தீவிர வியூகம் வகுத்துள்ளது. எம்.எல்.ஏ ஐ.பி.செந்தில்குமார் களம் இறங்க வாய்ப்புள்ள நிலையில், மகளிர் ஆணைய உறுப்பினர் ஷாமிலி பிரபா மற்றும் கவுன்சிலர் கே.கே.ஆர்.வெங்கடேஷ் ஆகிய புதுமுகங்களும் சீட் கேட்டு மல்லுக்கட்டுகின்றனர். 1996-க்குப் பிறகு இங்கு நேரடி வெற்றியைப் பதிவு செய்யத் துடிக்கும் திமுக கனவு நிறைவேறுமா? மக்களே கமெண்ட் பண்ணுங்க
News March 13, 2026
திண்டுக்கல் மாவட்ட காவல்துறை விழிப்புணர்வு!

திண்டுக்கல் மாவட்ட காவல்துறையினர் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு புகைப்படத்தை வெளியிட்டுள்ளனர். “சாலையில் சாகசம் செய்வதைத் தவிர்ப்போம், பாதுகாப்பான பயணம் மேற்கொள்வோம்” “சாகசங்கள் வாழ்க்கையை இழக்க நேரிடும்” என்றும், “வாகனங்களில் மிதமான வேகத்தில் செல்வதே பாதுகாப்பானது” என் காவல்துறையினர் விழிப்புணர்வு அறிவுரை வழங்கியுள்ளனர்.
News March 12, 2026
திண்டுக்கல்: உங்களைத் தேடி வரும் பெட்ரோல்!

உங்களது டூவீலர் / காரில் நீங்கள் சென்று கொண்டிருக்கும் போது, பாதி வழியில் திடீரென பெட்ரோல் தீர்ந்து நிற்பதை விட கொடுமையான விஷயம் வேறேதுமில்லை. இதுபோன்ற சூழலில் நீங்கள் சிக்கிக் கொண்டால், பதட்டப்படாமல், இந்தியன் ஆயில் நிறுவனத்தின் <


