News March 15, 2026
விஜய் தனித்து விடப்பட்டார்: சீமான்

ஆட்சியில் பங்கு தருகிறோம் என அழைத்தும் யாரும் வராததால் விஜய் தனித்து விடப்பட்டார் என்று சீமான் கூறியுள்ளார். கூட்டத்தோடு நிற்க யாருக்கும் வீரமோ, துணிவோ தேவையில்லை என்ற அவர், தாங்கள் (நாதக) வீரர்கள், எனவே தனித்து நிற்கிறோம் என்றும் குறிப்பிட்டுள்ளார். அத்துடன், தாங்கள் மக்களை முழுமையாக நம்புவதாகவும், அவர்கள் கட்சியையும் தலைவர்களையும் நம்புகிறார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.
Similar News
News April 6, 2026
நடிகை சுபாஷினி மரணம்.. அதிர்ச்சியூட்டும் தகவல்

<<19578782>>நடிகை சுபாஷினி<<>> தற்கொலை விவகாரத்தில் திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 3-ம் தேதி சென்னை வந்த அவர் ஷூட்டிங்கிற்காக போரூரில் உள்ள தனியார் குடியிருப்பு ஒன்றில் தங்கியிருந்துள்ளார். நேற்று இரவு, பெங்களூருவில் உள்ள தனது கணவருடன் வீடியோ காலில் பேசியபோது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாகவும், அப்போது மனமுடைந்த சுபாஷினி, கணவருடன் பேசியபடியே தூக்கிட்டு உயிரை மாய்த்துக் கொண்டது தெரியவந்துள்ளது.
News April 6, 2026
தஞ்சை திமுக மேயர் ராஜினாமா

தஞ்சை மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். மேயர் முடிய இன்னும் ஓராண்டு உள்ள நிலையில், சட்டப்பேரவைத் தேர்தலில் தஞ்சை தொகுதியில் திமுக வேட்பாளராக சண்.ராமநாதன் களமிறங்கியுள்ளார். இன்னும் சற்றுநேரத்தில் வேட்புமனு தாக்கல் செய்யவிருக்கும் நிலையில், அவர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். ஏற்கெனவே, நாகர்கோவில் மேயர் மகேஷ் பதவியை ராஜினாமா செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.
News April 6, 2026
FLASH: அமீர் வீட்டில் IT அதிகாரிகள் சோதனை

சென்னையில், போதைப்பொருள் கடத்தல் வழக்கில் தொடர்புடைய <<19578024>>ஜாபர் சாதிக்கை<<>> தொடர்ந்து இயக்குநர் அமீர் வீட்டிலும் IT அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். ஏற்கெனவே, ₹2,000 கோடி மதிப்பிலான போதைப்பொருள் வழக்கில் ஜாபர் சாதிக்கை கைது செய்தபோது, அது தொடர்பாக இயக்குநர் அமீரிடம் ED அதிகாரிகள் விசாரணை நடத்தியது குறிப்பிடத்தக்கது.


