News March 15, 2026

நான் செய்த மிகப்பெரிய தப்பு இதுதான்: OPS

image

நான் செய்த மிகப்பெரிய தப்பு EPS-ன் 4 ஆண்டுக் கால ஆட்சி தொடர்வதற்கு நம்பிக்கை தீர்மானத்தின் போது 5 MLA-க்களை வைத்து ஆதரவு தெரிவித்ததுதான் என OPS கூறியுள்ளார். மேலும் துரோகம் செய்ததால் தென்பகுதி மக்கள் EPS-ஐ ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் எனவும், அரசியலில் உள்ள ஒரே ஒரு துரோகியான அவரை தமிழக வாக்காளர்கள் அரசியலிருந்து துடைத்து எறிவார்கள் எனவும் சாடியுள்ளார்.

Similar News

News April 7, 2026

லாக்டவுன்.. முதல் நாடாக அறிவித்தது

image

மேற்காசிய போர் பதற்றத்தால், பாகிஸ்தானில் கடும் எரிபொருள் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், PM ஷெபாஸ் ஷெரிஃப் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின் அடிப்படையில், இன்று முதல் பகுதியளவு பொதுமுடக்கத்தை அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. இதன்படி, கடைகள், வணிக வளாகங்கள் இரவு 8 மணிக்கு மூட வேண்டும். ஹோட்டல்கள், திருமண அரங்குகள் இரவு 10 மணிக்கு மேல் செயல்பட தடை விதிக்கப்பட்டுள்ளது.

News April 7, 2026

நீட் விலக்கு.. கார்த்தி சிதம்பரம் கொடுத்த வாக்கு

image

இம்முறை திமுகவின் தேர்தல் அறிக்கையில் நீட் ரத்து வாக்குறுதி இல்லையென விமர்சனம் எழுந்தது. இந்நிலையில் இதைப் பற்றிப் பேசிய கார்த்தி சிதம்பரம், நீட் வேண்டாம் என்பதுதான் தமிழ்நாட்டின் பரவலான கருத்து, இதற்கு மற்ற மாநிலங்களும் குரல் கொடுக்க வேண்டும். ஆனால் மத்தியில் பாஜக ஆட்சி இருக்கும் வரை நீட்டுக்கு விலக்கு கிடைக்காது என்றார். மத்தியில் காங்., ஆட்சி அமைந்தால் நீட் விலக்கு அளிக்கலாம் என்றும் கூறினார்.

News April 7, 2026

மணிப்பூரில் மீண்டும் பதற்றம்.. இன்டர்நெட் முடக்கம்

image

மணிப்பூர் மொய்ராங் பகுதியில் உள்ள ஒரு வீட்டின் மீது நடத்தப்பட்ட ராக்கெட் தாக்குதலில் 2 குழந்தைகள் உயிரிழந்தன. இதனால் <<19208220>>உள்ளூர் மக்களிடையே<<>> போராட்டம் வெடித்து, ஒரு லாரி தீக்கிரையாக்கப்பட்டதோடு, CRPF வீரர்களுடனான மோதல்களில் 19-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இதையடுத்து 5 மாவட்டங்களில் இன்டர்நெட் முடக்கப்பட்டு, பிஷ்ணுபூர் மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!