News May 14, 2024
இதற்காகவே இந்த ஆண்டு தேர்தல் நடக்கிறது

பாஜக, ஆர்.எஸ்.எஸ்., மற்றும் பிரதமர் மோடி இந்தியாவின் அரசியலமைப்பு புத்தகத்தை கிழித்து ஏறிய பார்க்கிறார்கள் என ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். ஏழைகள், விவசாயிகள், தொழிலாளர்கள், சிறுபான்மையினர் என அனைவருக்கும் உரிமைகளை வழங்குவது இந்த அரசியலமைப்புதான் எனக் கூறிய அவர், முதன்முறையாக அரசியலமைப்பு சட்டத்தைப் பாதுகாப்பதற்காக மக்களவைத் தேர்தல் நடக்கிறது எனக் கூறியுள்ளார்.
Similar News
News March 12, 2026
வீட்டிலேயே பெடிக்யூர் செய்வது எப்படி?

பெடிக்யூர் செய்யும் ஆசை இருந்தாலும், பணம் அதிகமாக செலவாகும் என்பதால் தயங்குறீங்களா? அட, வீட்டிலேயே அருமையாக பெடிக்யூர் செய்துகொள்ளலாம். எலுமிச்சை பழத்தை வெட்டி, அதில் மஞ்சள் பொடி, ஷாம்பூ, பேக்கிங் சோடாவை சேர்த்துக்கொள்ளுங்கள். இதனை உங்கள் பாதங்களில் தேய்த்து வர இறந்த செல்கள் நீங்கி, பளிச்சென்று காட்சியளிக்கும். பார்லருக்கு செல்பவர்களுக்கு இதை SHARE பண்ணுங்க.
News March 12, 2026
ராமதாஸ் வழக்கிற்கு இடைக்கால தடை

கட்சி(பாமக) உரிமை தொடர்பாக ராமதாஸ் தொடர்ந்த வழக்கிற்கு சென்னை HC இடைக்கால தடை விதித்துள்ளது. கட்சி பெயர், சின்னம் பயன்படுத்துவதை எதிர்த்து அன்புமணிக்கு எதிராக சிட்டி சிவில் நீதிமன்றத்தில் ராமதாஸ் வழக்குத் தொடுத்திருந்தார். இந்த வழக்கிற்கு தடை விதிக்க வேண்டும் என தெரிவித்து HC-ல் பாமகவின் பொதுச்செயலாளர் வடிவேல் ராவணன் மனு தாக்கல் செய்திருந்த நிலையில், இன்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
News March 12, 2026
Induction Stove-வுக்கு அதிகரித்த டிமாண்ட்.. No Stock!

கேஸ் சிலிண்டர் பற்றாக்குறையை அடுத்து, இண்டக்ஷன் ஸ்டவ் விற்பனை பல மடங்கு அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. பிளிங்கிட், பிளிப்கார்ட் மற்றும் அமேசான் ஆகியவற்றில் 2-3 நாட்களாக ஆர்டர்கள் குவிந்து வருகின்றன. பிளிப்கார்ட்டில் மட்டும் விற்பனை 3 மடங்கு அதிகரித்துள்ளது. பல தளங்களில் இப்போது இண்டக்ஷன் ஸ்டவ் முழுவதும் விற்றுத் தீர்ந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடைகளிலும் இதே நிலைதான் உள்ளதாம்.


