News May 14, 2024

₹16,900 கோடி நிறுவன அதிபரான அக்கவுண்டன்ட்

image

நாட்டின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான ஜோதி லேபாரட்டரீஸ் ₹16,900 கோடி சந்தை மதிப்பு கொண்டது. உஜாலா, எக்ஸோ பார் உள்ளிட்டவற்றை அந்நிறுவனம் விற்பனை செய்கிறது. அந்நிறுவன அதிபரான எம்.பி. ராமசந்திரன், கேரளாவைச் சேர்ந்தவர். பிகாம் படித்துள்ள அவர், முதலில் அக்கவுண்டன்ட் ஆக பணியாற்றினார். பிறகு சகோதரரிடம் ₹5,000 கடன் வாங்கி, தனது மகள் ஜோதி பெயரில் அந்நிறுவனத்தை 1983இல் தொடங்கி சாதித்தார்.

Similar News

News March 17, 2026

திண்டுக்கல்லில் சட்டவிரோத மதுபானம் விற்ற 5 பேர் கைது

image

திண்டுக்கல் நகர் டி.எஸ்.பி. கார்த்திக் உத்தரவின் பேரில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது பூ மார்க்கெட், மேட்டுப்பட்டி பேட்டை ரோடு, நேருஜி நகர், தாடிக்கொம்பு ரோடு, ஏ.எம்.சி. ரோடு பகுதிகளில் அரசு அனுமதியின்றி மதுபானம் விற்ற சின்னமணி, நாகராஜ், வீரம்மாள், முருகன், வைரலிங்கம் ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டு அவர்களிடமிருந்து ரூ.20 ஆயிரம் மதிப்புள்ள 130 மதுபான பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

News March 17, 2026

கட்சியில் இருந்து அதிரடி நீக்கம்

image

CPI-யின் மதூர் சத்யா மீதான பாலியல் புகார் தொடர்பாக கட்சி தலைமை அலுவலகத்தில் மூத்த தலைவர்கள் ஆலோசனை செய்தனர். இதன்பின், மதூர் சத்யாவை கட்சியிலிருந்து நீக்கி அதிரடியாக உத்தரவிட்டுள்ளனர். AIYF, ISCUF அமைப்புகளில் மதூர் சத்யா வகித்து வந்த அனைத்து பொறுப்புகள் மற்றும் அடிப்படை உறுப்பினரில் இருந்தும் நீக்கம் செய்யப்பட்டுள்ளார். தேர்தல் நேரத்தில் இந்த பாலியல் விவகாரம் பேசுபொருளாக மாறியுள்ளது.

News March 17, 2026

ஆன்லைனில் வேட்புமனு தாக்கல் செய்ய App அறிமுகம்

image

SUVIDHA 2.0 என்ற புதிய செயலியை ECI அறிமுகம் செய்துள்ளது. இந்த செயலியின் மூலம் வேட்பாளர்கள், தங்கள் வேட்புமனுவை ஆன்லைனிலேயே தாக்கல் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் செயல்பாடுகள் பற்றி ECI விரிவாக விரைவில் தெளிவுபடுத்தும் என தகவல்கள் கூறுகின்றன. இருப்பினும், மக்களைக் கவரும் நோக்கில் நேரடியாகச் சென்று வேட்புமனு தாக்கல் செய்வதையே வேட்பாளர்கள் விரும்புவர் என்றும் கூறப்படுகிறது.

error: Content is protected !!