News May 14, 2024
7ம் இடம் பிடித்த சிவகங்கை மாவட்டம்

பதினொன்றாம் வகுப்பு அரசு பொதுத் தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்ட நிலையில் சிவகங்கை மாவட்டத்தில் மொத்தம் 16,327 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினர். இதில் 15,441 பேர் தேர்ச்சி பெற்றனர். சிவகங்கை மாவட்டத்தில் ஒட்டு மொத்த தேர்ச்சி விகிதம் 94.57% ஆகும். மாநில அளவில் சென்ற ஆண்டில் 9 -ஆவது இடத்தை பிடித்திருந்த சிவகங்கை மாவட்டம் நடப்பாண்டில் 7 -ஆவது இடத்துக்கு முன்னேறி உள்ளது.
Similar News
News March 16, 2026
சிவகங்கை: சொத்து வாங்கும் போது இத CHECK பண்ணுங்க..

1.வில்லங்க சான்றிதழ் (சொத்தின் மீது கடன் (அ) அடமானம்)
2.தாய்பத்திரம் (சொத்தின் பழைய உரிமைகள்)
3.சொத்து யாருடைய பெயரில் உள்ளது மற்றும் விற்பனை பத்திரங்கள்
4. கட்டட அனுமதி (CMDA அ DTCP வரைபடம்)
5. வரி ரசீதுகள் (சொத்து, குடிநீர், மின்சார வரிகள்)
சொத்துக்கள் வாங்கும் போது வீணாக ஏமாறாமல் இந்த எண்களுக்கு 9498452110 / 9498452120 அழைத்து
CHECK செய்து வாங்குங்க. மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க..
News March 16, 2026
சிவகங்கை: தேர்தல் விதிமுறை மீறல் குறித்து புகார் தெரிவிக்கலாம்

சிவகங்கை மாவட்டத்தில் தேர்தல் நன்னடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ள நிலையில், விதிமுறை மீறல்கள் குறித்து பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சிகள் புகார் அளிக்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பொதுமக்கள் 18004257036 மற்றும் 1950 என்ற தொலைபேசி எண்களுக்கு தொடர்பு கொண்டு தேர்தல் விதிமுறை மீறல்கள் குறித்து புகார் அளிக்கலாம் என ஆட்சியர் பொற்கொடி தெரிவித்துள்ளார்.
News March 16, 2026
சிவகங்கை மருத்துவக் கல்லூரி புதிய டீன் பொறுப்பேற்பு

சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரியின் டீனாக டாக்டர் ஆர்.செல்வராஜன் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரியில் மயக்கவியல் (அனஸ்தீசியா) பேராசிரியராக பணியாற்றி வந்த அவர், வழக்கமான பதவி உயர்வின் அடிப்படையில், இந்த பொறுப்பிற்கு நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த நியமனம் மூலம் மருத்துவக் கல்லூரியின் கல்வி மற்றும் சிகிச்சை சேவைகள் மேலும் மேம்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.


