News May 14, 2024
வேட்பாளர் கிடைக்காமல் தவிக்கும் காங்கிரஸ்

தேர்தலில் போட்டியிட வேட்பாளர் இல்லாமல் காங்கிரஸ் தவிப்பதாக மத்தியப் பிரதேச முதல்வர் மோகன் யாதவ் குற்றம்சாட்டியுள்ளார். மத்தியில் மீண்டும் வெற்றி பெற்று ஆட்சியமைப்போம் என்று காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணி தெரிவித்து வருகிறது. இதுகுறித்த கேள்விக்கு பதிலளித்த மோகன் யாதவ், வேட்பாளர்களை தேடி அலையும் நிலையில் காங்கிரஸ் உள்ளது, அப்படியிருக்கையில் எப்படி ஆட்சியமைக்கும்? என்றார்.
Similar News
News March 25, 2026
19 வருட IPL-ல் யாரும் நெருங்க முடியாத சாதனை!

19 வருட 19 வருட IPL வரலாற்றில், பைனலில் தோற்ற அணியில் இருந்து ‘மேன் ஆப் தி மேட்ச்’ விருது பெற்ற ஒரே வீரர் என்ற சாதனையை கும்ப்ளே(RCB) தன்வசம் வைத்துள்ளார். 2009-ம் ஆண்டு பைனலில், முதலில் ஆடிய டெக்கான் சார்ஜர்ஸ் 143 ரன்கள் எடுத்தது. கும்ப்ளே 4 ஓவர்களில் 16 ரன்களை விட்டுக்கொடுத்து 4 விக்கெட்களை வீழ்த்தினார். 6 ரன்கள் வித்தியாசத்தில் RCB தோற்றாலும், கும்ப்ளே ‘மேன் ஆப் தி மேட்ச்’ விருதை வென்றார்.
News March 25, 2026
₹3,500 ஆக உயர்வு.. புதிய தேர்தல் வாக்குறுதி

விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு நெல்லுக்கான ஆதார விலை குவிண்டால் ஒன்றுக்கு ₹3,500 ஆக உயர்த்தி வழங்கப்படும் என அதிமுக தேர்தல் வாக்குறுதியில் தெரிவித்துள்ளது. அதேபோல், கரும்பு உற்பத்திக்கு ஆகும் செலவைக் கருத்தில் கொண்டு கொள்முதல் விலை டன் ஒன்றுக்கு ₹4,500 ஆக நிர்ணயம் செய்யப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. நெல் கொள்முதலுக்கான ஆதார விலை தற்போது குவிண்டால் ஒன்றுக்கு ₹2,500 ஆக உள்ளது.
News March 25, 2026
ஈரான் – USA போர்.. முக்கிய பங்கு வகிக்கும் பாகிஸ்தான்

மத்திய கிழக்கு போரை முடிவுக்கு கொண்டு வரும் வாய்ப்பை இந்தியா நழுவவிட்ட நிலையில், அதற்கான முயற்சிகளில் பாகிஸ்தான் முன்னேறியுள்ளது. ஈரானுடன் பேச்சுவார்த்தை நடத்த US துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் தலைமையிலான குழு 15 அம்ச திட்டத்துடன் விரைவில் பாகிஸ்தான் செல்ல திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இவ்விரு நாடுகளுக்கும் இடையே இஸ்லாமாபாத்தில் வைத்து பாகிஸ்தான் மத்தியஸ்தம் செய்யவுள்ளது.


