News May 14, 2024

கோவை கலெக்டர் அறிவிப்பு

image

கோவை கலெக்டர் கிராந்திகுமார் பாடி இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டையினை புதிதாக பெற மற்றும் ஏற்கனவே விண்ணப்பித்து இதுவரை பெறப்படாத மாற்றுத்திறனாளிகள் கோவை ஆட்சியர் அலுவலகத்தில் அமைந்துள்ள மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தை தொடர்பு கொண்டு உரிய ஆவணங்களுடன் வரும் ஜூன் 30-ம் தேதிக்குள் விண்ணப்பித்து பயன்பெற கேட்டு கொள்ளப்பட்டுள்ளது.

Similar News

News March 7, 2026

கோவை: உயிரைக் காக்க Whatsapp-ல் ஒரு ‘Hi’ போதும்!

image

கோவை மக்களே அவசர கால 108 ஆம்புலன்ஸ் சேவையை இனி வாட்ஸ் ஆப் மூலமாக பெறும் பிரத்யேக வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. முதலில் 94450 30725 என்ற எண்ணை சேமித்து ‘Hi’ என அனுப்பவும். பிறகு Book Ambulance -ஐ தேர்வு செய்து (send Location) என்பதை கிளிக் செய்து Location-னை பகிரவும். கட்டுப்பாட்டு மையம் உடனே உங்களைத் தொடர்புகொண்டு ஆம்புலன்ஸ் தகவலை வழங்கும். ஆபத்து நேரத்தில் கண்டிப்பாக உதவும். SHARE!

News March 7, 2026

கோவையில் வானதி சீனிவாசன்: தொகுதி மாற்றமா?

image

கோவை தெற்கு எம்.எல்.ஏ வானதி சீனிவாசன், 2026 சட்ட மன்ற தேர்தலில் கோவை வடக்கு தொகுதிக்கு மாற முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தநிலையில் கட்சியின் ஆணிவேரான தெற்கு தொகுதியைக் கைவிடுவது பின்னடைவை ஏற்படுத்தும் என இந்து இயக்கங்கள் மற்றும் பா.ஜ.க நிர்வாகிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஆனால், தொகுதி குறித்து கட்சித் தலைமையே இறுதி முடிவு எடுக்கும் என வானதி விளக்கமளித்துள்ளார்.

News March 7, 2026

கோவையை உலுக்கிய வழக்கில் இன்று தீர்ப்பு

image

கோவை பீளமேடு விமான நிலையம் அருகே கடந்த ஆண்டு நவ.2 ஆம் தேதி நண்பருடன் காரில் அமர்ந்து பேசி கொண்டிருந்த கல்லூரி மாணவி 3 பேர் கும்பலால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். இவ்வழக்கில் 3 பேர் துப்பாக்கியால் சுட்டு கைது செய்யப்பட்டனர். கோவையை உலுக்கிய இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட உள்ளது. நீதிபதி – சுந்தர் ராஜன்.
அரசு தரப்பு வக்கீல் – பி. ஜிஷா.
எதிர் தரப்பு வக்கீல் – சசிகுமார்.

error: Content is protected !!