News March 14, 2026
வெள்ளி விலை இன்று கிலோவுக்கு ₹10,000 குறைந்தது!

தங்கத்தை போன்றே இன்று (மார்ச் 14) வெள்ளி விலையும் குறைந்துள்ளது. 1 கிராம் ₹10 குறைந்து ₹280-க்கும், 1 கிலோ வெள்ளி ₹10,000 குறைந்து ₹2.80 லட்சத்துக்கும் விற்பனையாகிறது. சர்வதேச சந்தையில் வெள்ளி விலை தொடர்ந்து குறைந்து வருவதால், வரும் நாள்களில் இந்திய சந்தையிலும் இதன் தாக்கம் இருக்கும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.
Similar News
News April 2, 2026
CSK ரசிகர்களுக்கு ஹேப்பி நியூஸ்!

SK அணி தனது முதல் போட்டியில் படுதோல்வி அடைந்து ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றமளித்தது. பேட்டிங் ரொம்ப மோசமாக இருக்குதே என வருந்திய ரசிகர்களுக்கு ஒரு ஹேப்பி நியூஸ் கிடைத்துள்ளது. காயம் காரணமாக முதல் போட்டியில் விளையாடாத CSK-ன் நம்பிக்கை நட்ச்த்திரம் பிரேவிஸ் நேற்று வலைப்பயிற்சியில் ஈடுபட்டுள்ளார். அவர் நாளை, PBKS-க்கு எதிராக விளையாடுவார் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. நாளை CSK வெற்றி பெறுமா?
News April 2, 2026
இன்று இறுதியாகிறதா காங்., வேட்பாளர் பட்டியல்?

தேர்தலுக்கு 20 நாள்களே உள்ள நிலையில், <<19543260>>காங்.,<<>> வேட்பாளர்களை இறுதி செய்வதில் இழுபறி நீடிக்கிறது. இந்நிலையில், வேட்பாளர்களை தேர்வு செய்வதற்கான காங்., மத்திய தேர்தல் குழு கூட்டம் இன்று இரவு 8 மணிக்கு டெல்லியில் நடைபெறுகிறது. கார்கே, ராகுல் உள்ளிட்டோர் பங்கேற்கும் இக்கூட்டத்தில் இறுதி முடிவு எட்டப்பட்டு, நாளை பட்டியல் வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது.
News April 2, 2026
FLASH: வெள்ளி விலை ₹10,000 குறைந்தது!

வெள்ளி விலை நேற்று கிலோவுக்கு ₹15,000 அதிகரித்த நிலையில், இன்று ₹10,000 குறைந்துள்ளது. இதனால், சென்னையில் சில்லறை விற்பனையில் 1 கிராம் ₹255-க்கும், மொத்த விற்பனையில் பார் வெள்ளி 1 கிலோ ₹2,55,000-க்கும் விற்பனையாகிறது. சர்வதேச சந்தையில் வெள்ளி விலை 5% சரிந்து 1 அவுன்ஸ்(28g) 71 டாலர் என்ற நிலையில் விற்பனையாகி வருகிறது.


