News May 14, 2024
திருவள்ளூர்: இரவு ரோந்து போலீசார் விபரம் வெளியீடு

திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று (மே.14) இரவு ரோந்துப் பணியில் ஈடுபடும் காவல் அதிகாரிகளின் விவரம் மற்றும் தொடர்பு கொள்ள கைப்பேசி எண்கள் வெளியிடப்பட்டு உள்ளது. பொதுமக்கள் குற்றச்சம்பவங்கள் மற்றும் அவசர உதவிக்கு மேற்கண்ட காவல் அதிகாரிகளை தொடர்புக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை திருவள்ளூர் மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது.
Similar News
News March 8, 2026
திருவள்ளூர்: மகளிருக்கு இந்த எண்கள் அவசியம்!

திருவள்ளூர் மாவட்ட மக்களே.., மகளிர் பாதுகாபிற்காக அரசு சார்பாக அரசு அறிமுகப்படுத்திய செயலி காவல் உதவி. வேலைக்கு செல்லும் பெண்கள் ஏதேனும் பாதுகாப்பு இல்லை என உணர்ந்தால் இந்த செயலியில் உள்ள பொத்தானை அமுக்கினால் போதும், போலீஸ் உதவி உங்களைத் தேடி வரும். மேலும், குடும்பத்தில், பணியிடத்தில் அச்சுறுத்தல், வன்முறை நிகழ்ந்தால் உடனே 181-ஐ அழைக்கலாம். இந்தத் தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
News March 8, 2026
கும்மிடிப்பூண்டி; இலங்கை தமிழர் முகாமில் படுகொலை!

திருவள்ளூர்: கும்மிடிப்பூண்டியில் உள்ள இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் தலைவராக இருந்தவர் சிவகுமார் என்கின்ற கண்ணன்(42). நேற்று(மார்ச் 7) இரவு இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் பகுதியில் இருதரப்பு சமரசத்திற்கு சென்ற சிவகுமார் மர்ம கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் கும்மிடிப்பூண்டியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
News March 8, 2026
புழல்: கால்வாயில் இளம்பெண் சடலம்!

திருவள்ளூர்: புழல் அறிஞர் அண்ணா நகர் ரெட்டேரி கால்வாயில் 25 வயது மதிக்கத்தக்க பெண் சடலம் மிதப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதுகுறித்த விசாரணையில், பிணமாக கிடந்தது சென்னை ராஜமங்கலம் மேற்கு தெருவைச் சேர்ந்த பழனி என்பவரது மகள் ஆசா கீர்த்தி(26) என்பதும், கடந்த மார்ச் 5ஆம் தேதி வீட்டில் மாயமானவர், வேலை கிடைக்காத விரக்தியில் கால்வாயில் குதித்து தற்கொலை செய்துகொண்டதும் தெரிய வந்தது.


