News March 14, 2026
மார்ச் 16-ல் அதிமுக தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை

அதிமுக கூட்டணி கட்சிகளுடனான தொகுதிப் பங்கீடு, மார்ச் 16-ல் அதிகாரப்பூர்வமாக தொடங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பாஜக, பாமக உள்ளிட்ட கட்சிகள் அங்கம் வகிக்கும் நிலையில், இதுவரை தொகுதி உடன்பாடு முடிவாகவில்லை. சீட் பேரத்தில் இழுபறி நீடிப்பதாலேயே பேச்சுவார்த்தை தொடங்கவில்லை என்றும், பாஜகவுக்கு EPS பிடி கொடுக்கவில்லை எனவும் கூறப்படுகிறது. இந்நிலையில், நாளை தேர்தல் தேதி அறிவிக்கப்படலாம் என கூறப்படுகிறது.
Similar News
News April 6, 2026
CSK தோல்விக்கு இதுதான் காரணம்.. அஸ்வின் ஓபன் டாக்

கடந்த IPL சீசன் தனக்கு ஏமாற்றம், வலி மிகுந்ததாக இருந்ததாக அஸ்வின் பேசியுள்ளார். தன்னை விடுவிப்பதா, தக்க வைப்பதா என்ற தலைவலியை நிர்வாகத்திற்கு கொடுக்க வேண்டாம் என்பதற்காகவே தானாக முன்வந்து ரிட்டயர் ஆனதாகவும் கூறியுள்ளார். இதனால், அணிக்கு ₹10 கோடி மிச்சமானதாக குறிப்பிட்ட அவர், நடப்பு சீசனில் CSK-வின் தோல்விக்கு, ஃபாஸ்ட் பவுலர்களை சரியாக பயன்படுத்தாததே காரணம் என தெரிவித்துள்ளார்.
News April 6, 2026
நடிகை த்ரிஷா திடீர் முடிவு.. ரசிகர்கள் அதிர்ச்சி

சினிமாவில் 20 ஆண்டுகளுக்கு மேலாக கோலோச்சிவரும் த்ரிஷா நடிப்பை கைவிட முடிவு செய்திருப்பதாக அண்மையில் தகவல் வெளியானது. இதனை உறுதிப்படுத்தும் வகையில் பிரபல நடிகரும் சினிமா விமர்சகருமான சித்ரா லட்சுமணன் பேசியுள்ளார். த்ரிஷா சினிமாவில் இருந்து விலகுவதை தன்னிடம் சில தயாரிப்பாளர்கள் உறுதிப்படுத்தியதாக அவர் குறிப்பிட்டுள்ளார். த்ரிஷாவின் திடீர் முடிவு ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.
News April 6, 2026
கொத்தனாராக மாறிய ஆதவ்.. வாக்கு சேகரிப்பில் தீவிரம்

சட்டப்பேரவை தேர்தலில் வாக்கு சேகரிக்க ஒவ்வொரு வேட்பாளரும் புதுப்புது உத்திகளை கையாள்கின்றனர். அந்த வகையில், வில்லிவாக்கம் தொகுதியின் தவெக வேட்பாளர் ஆதவ் அர்ஜுனாவும், வீடுகட்டும் சித்தாள்களுக்கு உதவுவது, இளைஞர்களுடன் கிரிக்கெட் விளையாடுவது, துணிகளுக்கு இஸ்திரி போடுவது என களத்தில் வாக்கு சேகரித்தார். சில இடங்களில் மக்கள் அவருக்கு ஆரத்தி எடுத்து வரவேற்றனர்.


