News May 14, 2024
அரசினர் மகளிர் கல்லூரி தேர்வு முடிவுகள் வெளியீடு

குந்தவை நாச்சியார் அரசு மகளிர் கலைக்கல்லூரியில் 2023 – 2024ஆம் ஆண்டிற்கான இளநிலை மற்றும் முதுநிலை பருவத் தேர்வு முடிவுகள் இன்று மாலை www.kngac.ac.in என்ற தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. மறுகூட்டல் மற்றும் ஒளிநகல் பிரதிக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் 06.06.2024, மறுமதிப்பீட்டுக்கு கடைசி நாள், 08.06.2024, உடனடி தேர்விற்கு 11.06.2024 கடைசிநாள் என்று கல்லூரி நிர்வாகம் அறிவித்துள்ளது.
Similar News
News March 11, 2026
தஞ்சை: மின்சாரம் தாக்கி பெண் ஒருவர் பலி

கும்பகோணம் அருகே மருதாநல்லூரைச் சேர்ந்தவர் தமிழரசி (55). இவர் நேற்று பனை மட்டை எடுக்க சென்றபோது அங்கு அறுந்து கிடந்த மின்கம்பியைத் தவறுதலாக மிதித்ததால் மின்சாரம் தாக்கி அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து அவரது உடல் கும்பகோணம் அரசு பொது மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. மேலும் இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீசார் னழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
News March 11, 2026
தஞ்சாவூர்: இரவு ரோந்து பணி போலீசார் விவரம்

தஞ்சாவூர் மாவட்டத்தில் நேற்று (மார்ச்.10) இரவு 10 முதல் இன்று (மார்ச்.11) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அலுவலரை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!
News March 10, 2026
தஞ்சை: மாதம் ரூ.6,000 வேண்டுமா ?

மத்திய அரசின் DDU-GKY திட்டத்தின் மூலம் வேலைவாய்ப்பற்ற கிராமப்புற இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சிகள் இலவசமாக வழங்கப்படுகிறது. இதில் 15 முதல் 35 வயதுடைய ஆண்களும், 40 வயதுக்குட்பட்ட பெண்களும் விண்ணப்பிக்கலாம். இந்த பயிற்சிக்கு தேர்ந்தெடுக்கப்படுவோருக்கும் 2 முதல் 6 மாதங்களுக்கு ஒவ்வொரு மாதமும் ரூ.6,000 ஊக்கத்தொகை வழங்கப்படும். இதில் பதிவு செய்ய <


