News May 14, 2024

நாகையில் குடிநீர் கேன் விலை உயர்வு

image

கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் அதே நேரத்தில் குடிநீரின் தேவையும் அதிகரித்து உள்ளது. நாகை பகுதியில் ஓராண்டுக்கும் மேலாக குடிநீர் தட்டுப்பாடு நிலவி வரும் வகையில் அதை தீர்ப்பதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டதாக தெரியவில்லை. இந்நிலையில் குடிநீரின் தேவை அதிகரித்துள்ள நிலையில் பிளாஸ்டிக் தண்ணீர் கேன்களின் விலை வழக்கத்தை விட ரூ.20 வரை அதிகரித்துள்ளது. பல இடங்களில் தட்டுப்பாடும் நிலவுகிறது.

Similar News

News March 6, 2026

நாகை: இளைஞரிடம் ரூ.6.34 லட்சம் மோசடி

image

நாகை மாவட்டம், வேளாங்கண்ணியைச் சேர்ந்தவர் முகேஷ்(31). இவர் மியூச்சுவல் பண்ட் முதலீட்டில் அதிக லாபம் கிடைக்கும் என நம்பி, அடையாளம் தெரியாத நபர்கள் இணைத்த வாட்ஸ்அப் குரூப் மூலம் ரூ.6.34 லட்சம் அனுப்பியுள்ளார். பணம் அனுப்பிய பிறகு தொடர்பு துண்டிக்கப்பட்டதால் மோசடி வெளிச்சத்திற்கு வந்த நிலையில், முகேஷின் புகாரின் பேரில் சைபர் க்ரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News March 6, 2026

நாகை: லாரி மோதியதில் தலை நசுங்கி முதிவர் பலி

image

நாகை மாவட்டம்ஆயக்காரன்புலத்தைச் சேர்ந்தவர் கணேசன். இவர் தாணிக் கோட்டகம் கடைத்தெருவில் இருசக்கர வாகனத்தில் செல்லும் போது, அவ்வழியே வந்த டாரஸ் லாரி மோதியது. இதில், சம்பவ இடத்திலேயே தலை நசங்கி கணேசன் உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்த வாய் மேடு போலீசார், லாரி ஓட்டுநர் பாஸ்கரனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் இந்த விபத்து சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

News March 6, 2026

நாகை: மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

image

நாகை மாவட்டத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் ஐ. சலீம் பாட்சா என்பவர் குறை தீர்ப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். wனவே பணிபுரிபவர்கள் வேலை உறுதி திட்டம் தொடர்பான குறைகள் மற்றும் புகார்கள் ஏதும் இருப்பின் கைப்பேசி எண் 8925811317, 9952606948 மற்றும் மின்னஞ்சல் முகவரியில் saleembatcha226@gmail தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம் என நாகை மாவட்ட ஆட்சியர் ப. ஆகாஷ் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!