News March 14, 2026
BREAKING: வீட்டு சிலிண்டர்.. CM ஸ்டாலின் ஹேப்பி நியூஸ்

சமையல் சிலிண்டர் தட்டுப்பாடு என்ற செய்திதான் கடந்த 2 நாள்களாக மக்கள் மத்தியில் பெரும் பீதியை ஏற்படுத்தி இருக்கிறது. இந்நிலையில் சிலிண்டர் தேவை, கையிருப்பு தொடர்பாக அதிகாரிகளுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார். மேலும், தட்டுப்பாட்டை போக்கவும், பொதுமக்கள் அனைவருக்கும் வீட்டு உபயோக சிலிண்டர் கிடைப்பதை உறுதி செய்யவும் உத்தரவிட்டுள்ளார்.
Similar News
News March 28, 2026
விவசாயக் கடன் தள்ளுபடி.. டிடிவி வாக்குறுதி

120 வாக்குறுதிகளை கொண்ட தேர்தல் அறிக்கையை டிடிவி வெளியிட்டுள்ளார். * விவசாயக் கடன் தள்ளுபடி *மாதம் ஒருமுறை மின்சாரக் கட்டணம் * பழைய ஓய்வூதியத் திட்டம் கொண்டு வரப்படும் * ஆண்கள் சுய உதவிக்குழு அமைக்கப்பட்டு நிதி வழங்கப்படும் * கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் திறக்கப்படும் * அரசு, தனியார் நிறுவனங்களில் 85% தமிழர்கள் பணி புரிய நடவடிக்கை எடுக்கப்படும் என வாக்குறுதி அளித்துள்ளார். <<-se>>#TNElection2026<<>>
News March 28, 2026
சாம்பியன் RCB-க்கு டஃப் கொடுக்குமா ஆரஞ்சு ஆர்மி!

நடப்பு சாம்பியன் RCB- SRH இன்று மோதுகின்றன. SRH-ல் இஷான், ஹெட், அபிஷேக், கிளாசென் ஆகியோர் பெரிய ஸ்கோரை விளாச உதவுவார்கள். கம்மின்ஸ் இல்லாமல் பவுலிங் மட்டும் கொஞ்சம் தடுமாறுகிறது. RCB-ல் கோலி, ஜிதேஷ், படிதர், சால்ட், வெங்கடேஷ் ஐயர் போன்றோர் சிறப்பான பார்மில் உள்ளார்கள். RCB-ன் பவுலிங்கும் வலுவாகவே உள்ளது. இந்நிலையில், பெங்களூரில் 284 ரன்களை விளாசி மிரட்டிய SRH, மீண்டும் மேஜிக்கை நிகழ்த்துமா?
News March 28, 2026
போரில் இணைந்த குழு.. இஸ்ரேல் மீது முதல் தாக்குதல்

ஏமனில் இருந்து இஸ்ரேலை நோக்கி ஒரு பாலிஸ்டிக் ஏவுகணையை ஏவியதன் மூலம் போரில் அதிகாரப்பூர்வமாக ஹூதி குழு இணைந்துள்ளது. ஈரான் ஹூதிகளுக்கு நவீன ஆயுதங்கள், நிதி & ராணுவப் பயிற்சிகளை வழங்கி வருகிறது. இந்த ஆதரவு ஏமனில் ஹூதிகளின் செல்வாக்கைத் தக்கவைக்க உதவுகிறது. இதனால் ஈரானுக்கு ஆதரவாக ஹூதி போரில் இறங்கியுள்ளது. ஆனால், ஹூதியின் தாக்குதலை இடைமறித்ததாக இஸ்ரேல் அறிவித்துள்ளது.


