News May 14, 2024

14 மாவட்டங்களில் இடியுடன் மழை

image

தமிழகத்தில் 14 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை இடி, மின்னலுடன் மழை பெய்யக் கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, விருதுநகர், தூத்துக்குடி, ராமநாதபுரம், நெல்லை, கோவை, குமரி, தருமபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு, மதுரை, சிவகங்கை, தேனி, திண்டுக்கல், தென்காசியில் மிதமான மழை பெய்யக் கூடும். இதன் காரணமாக சாலைகளில் தண்ணீர் தேங்கி போக்குவரத்து நெரிசல் ஏற்படலாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

Similar News

News March 20, 2026

ராசி பலன்கள் (20.03.2026)

image

ஒவ்வொரு நாளும் உங்களுக்கு உற்சாகம் தரும் நாளாக அமையட்டும். உங்களுக்கான தினசரி ராசி பலன்களை போட்டோ வடிவில் மேலே கொடுத்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக SWIPE செய்து உங்களுக்கான பலனை அறிந்துகொள்ளுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் இதை ஷேர் பண்ணுங்க!

News March 20, 2026

அன்புமணி, TTV அவசர டெல்லி பயணம்

image

NDA கூட்டணி தொகுதிப் பங்கீட்டில் இழுபறி நீடிக்கும் நிலையில், டெல்லியில் அமித்ஷாவை EPS நேரில் சந்தித்துள்ளார். இந்நிலையில் கூட்டணி தலைவர்களான அன்புமணி, TTV தினகரன் ஆகியோரும் நாளை டெல்லி சென்று அமித்ஷாவை சந்திக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அப்போது, தொகுதிப் பங்கீடு இறுதிசெய்யப்பட்டு முக்கிய அறிவிப்பு வெளியாகும் என கூறப்படுகிறது.

News March 20, 2026

சட்டம் ஒழுங்கில் ஏன் மெத்தனம்?

image

விளாத்திகுளம் மாணவி ரேப் மற்றும் கொலை வழக்கில், சந்தேக நபரை கைது செய்யவே 1 வாரத்துக்கு மேல் ஆகியுள்ளது. இந்த மாணவியின் மரணமாகட்டும், கஸ்டடியில் உயிரிழந்த ஆகாஷ் வழக்காகட்டும், ஏன் அஜித்குமார் மரண வழக்கில் கூட பாதிக்கப்பட்டவர்களும், மற்றவர்களும் போராடிய பின்னரே நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. சாமானிய மக்கள் என்றால் மெத்தனமாக தான் அதிகாரிகள் செயல்படுவார்களா என விமர்சகர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

error: Content is protected !!