News May 14, 2024

குழந்தை திருமணம் செய்தால் கடும் தண்டனை

image

குழந்தை திருமணச் சட்டம் 2006 இல் 18 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு திருமணம் செய்வது சட்டப்படி குற்றமாகும். 18 வயதுக்குட்பட்ட குழந்தையை 18 வயதிற்கு மேற்பட்டவர் திருமணம் செய்து கொண்டால் அவர்கள் குற்றவாளி ஆவார். குழந்தை திருமணம் நடந்தால் அதை ஏற்பாடு செய்தவர்கள், கலந்து கொண்ட அனைவரும் குற்றவாளிகளாக கருதப்படுவர். எனவே குழந்தை திருமணம் நடைபெற்றால் அதனை உடனடியாக 1098 என்ற எண்ணிற்கு தெரிவிக்கவும்.

Similar News

News March 4, 2026

அரியலூர்: இலவச தையல் மிஷின் வேண்டுமா?

image

சத்யவாணி முத்து அம்மையார் நினைவு இலவச தையல் இயந்திரத் திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தில் பின்தங்கிய பெண்கள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு இலவச தையல் இயந்திரங்கள் வழங்கப்படுகிறது. ஆண்டுக்கு ரூ.72,000-க்கும் கீழ் வருமானம் ஈட்டுபவர்கள் தங்கள் அருகில் உள்ள இ-சேவை மையம் மூலமாக இதற்கு விண்ணப்பிக்கலாம். மேலும் விபரங்களுக்கு அரியலூர் மாவட்ட சமூக நலத்துறை அலுவலகத்தை அணுகவும். இந்த தகவலை SHARE செய்யவும்.

News March 4, 2026

அரியலூர்: பாமகவினர் துண்டு பிரசுரம் விநியோகம்

image

அரியலூர் மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் மாவட்ட செயலாளர் தமிழ் மறவன் அறிவுறுத்தலின்படி, அன்புமணி ராமதாஸ் தரப்பைச் சார்ந்த நிர்வாகிகள் மற்றும் பொறுப்பாளர்கள் பொதுமக்களை நேரில் சந்தித்து துண்டு பிரசுரங்கள் வழங்கினர். அதன் ஒரு பகுதியாக நேற்று ஆண்டிமடம் ஒன்றியத்திற்கு உட்பட்ட குவாகம், வல்லம், மருதூர், கொடுகூர் உள்ளிட்ட கிராம மக்களை சந்தித்து துண்டு பிரசுரங்களை வழங்கினர்.

News March 4, 2026

அரியலூர்: காவல்துறையினருக்கு சான்றிதழ் வழங்கிய எஸ்.பி

image

அரியலூர் மாவட்ட காவல்துறையில் பணிபுரியும் காவல் துறையினருக்கு, அரியலூர் மாவட்ட ஆயுதப்படையில் புத்தாக்க பயிற்சி வகுப்பு நடைபெற்று வருகிறது. இந்நிலையில் 3, 4வது பேட்ச் பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டு சிறந்து விளங்கி முதல், 2 மற்றும் 3-ம் இடம் பிடித்த காவல்துறையினரை அரியலூர் மாவட்ட எஸ்.பி விஷ்வேஷ் பா.சாஸ்திரி நேற்று (மார்ச் 03) தனது அலுவலகத்திற்கு நேரில் வரவழைத்து சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.

error: Content is protected !!