News March 13, 2026
தமிழக தேர்தல் தேதி.. சற்றுமுன் வெளியான தகவல்

வரும் ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 15) தமிழகத்திற்கான தேர்தல் தேதியை ECI அறிவிக்கும் என தகவல் வெளியாகியுள்ளது. மார்ச் 14-ல், கொல்கத்தாவில் நடைபெறும் பாஜகவின் ‘பரிவர்த்தன் யாத்திரையின்’ நிறைவு பொதுக்கூட்டத்தில் PM மோடி பேசுகிறார். இதன்பிறகே தேர்தல் தேதி அறிவிப்பு வெளியாகும் என கூறப்படுகிறது. ஏப்ரல் 2-வது (அ) 3-வது வாரத்தில் ஒரே கட்டமாக தமிழகத்தில் தேர்தல் நடைபெறும் என்றும் ECI வட்டாரங்கள் கூறுகின்றன.
Similar News
News March 30, 2026
BREAKING: பிரசாரத்தை ரத்து செய்தார் விஜய்

CM ஸ்டாலினின் கொளத்தூர் தொகுதியில் பிரசாரத்தை முடிந்த பின் வில்லிவாக்கத்தில் பிரசாரம் செய்ய விஜய் திட்டமிட்டிருந்தார். ஆனால், கொளத்தூரில் பேசி முடித்த உடனேயே, வில்லிவாக்கம் பிரசாரத்தை ரத்து செய்துவிட்டு விஜய் கிளம்பி போய்விட்டார். போலீசாரின் பாதுகாப்பு குறைபாடே பிரசாரம் ரத்து செய்யப்பட காரணம் என புஸ்ஸி ஆனந்த் விளக்கம் அளித்துள்ளார்.
News March 30, 2026
ஈரான் போர்.. முதல் தமிழர் மரணம் PHOTO

ஈரானின் ஏவுகணை தாக்குதலால் குவைத்தில் தமிழர் ஒருவரின் உயிர் பறிபோயுள்ளது. ராமநாதபுரத்தைச் சேர்ந்த சந்தான கிருஷ்ணன் குவைத்தில் 15 ஆண்டுகளாக பணியாற்றி வந்தார். ஈரான் தாக்குதலில் அவர் உயிரிழந்த செய்தி அறிந்து குடும்பத்தினரை கண்ணீர் கடலில் ஆழ்த்தியுள்ளது. உடலை இந்தியா கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் உரிய இழப்பீடு வழங்குமாறும் குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
News March 30, 2026
சீன CCTV-களுக்கு தடை… ஆக்ஷனில் மத்திய அரசு

ஏப்ரல் 1 முதல் Hikvision, TP-Link, Dahua போன்ற சீன CCTV கேமராக்கள் மற்றும் சாதனங்களுக்கு தடை விதிக்கப்பட உள்ளது. நாட்டில் விற்கப்படும் CCTV தயாரிப்புகளுக்கு கண்டிப்பாக அனுமதி(STQC சான்றிதழ்) பெற வேண்டும் என்ற புதிய விதியை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. இண்டர்நெட்டுடன் சேர்ந்து இயங்கும் இந்த கேமராக்களால் பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்படலாம் என்பதே இதற்கு காரணம். நாட்டில் 3-ல் 1 சீன CCTV ஆக உள்ளது.


