News May 14, 2024
தென்காசி:மின்வாரியம் முக்கிய எச்சரிக்கை

தென்காசி மின் பகிர்மான வட்ட அதிகாரிகள் இன்று (மே 14) விடுத்துள்ள செய்தி குறிப்பு:தென்காசி மாவட்டத்தில் கோடை மழை காற்று, இடியுடன் பரவலாக பெய்ய தொடங்கியுள்ளது. இந்த நேரங்களில் பொதுமக்கள் மின் கம்பங்கள், மின் மாற்றிகள், மற்றும் மின் பகிர்வு பெட்டிகள் அருகே நிற்பதை தவிர்க்க வேண்டும். மின்கம்பிகள் அறுந்து கிடந்தால் அருகே உள்ள மின்வாரிய அலுவலகத்தில் உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும்.
Similar News
News July 7, 2025
பாவூர்சத்திரத்தில் பெண்கள் உட்பட 150 பேர் கைது

பாவூர்சத்திரம் கீழப்பாவூர் விலக்கு, காமராஜர் தினசரி சந்தை ஆகிய இரண்டு இடங்களில் மனமகிழ் மன்றங்களை திறப்பதற்கான பணிகள் நடைபெற்றது. இதனை கண்டித்து நேற்று காமராஜர் சிலை முன்பு நேற்று ஏராளமானோர் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். சாலை மறியலில் ஈடுபட்ட 77 பெண்கள் உட்பட 150 பேரை போலீசார் கைது செய்து அருகில் உள்ள தனியார் மண்டபத்தில் தங்க வைத்தனர்.
News July 7, 2025
தென்காசி மாவட்டம் இரவு ரோந்து பணி காவலர்களின் விவரம்

தென்காசி மாவட்டம் எஸ்.பி அவர்களின் உத்தரவின் பேரில் நாள்தோறும் இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டு வருகின்றனர். இன்று (ஜூலை 6) தென்காசி உட்கோட்ட பகுதியில் உள்ள ஊர்களான ஆலங்குளம், தென்காசி, சங்கரன்கோவில், புளியங்குடி போன்ற பகுதிகளில் உள்ள பொதுமக்களுக்கு இரவு நேரம் காவல்துறை உதவி தேவைப்பட்டால் தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண் கொடுக்கப்பட்டுள்ளது. அல்லது 100ஐ தொடர்பு கொள்ளலாம்.
News July 6, 2025
சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை சார்பில் தையல் பயிற்சி

தென்காசி மாவட்டம் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை தமிழ்நாடு கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற மகளிர் நல வாரியம் சார்பில் பெண்களுக்கான இலவச தையல் பயிற்சி உதவித் தொகையுடன் கூடிய பயிற்சி வழங்கபடுகிறது. மேலும் தகவல்களுக்கு 8778859095 தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என மகளிர் உரிமை துறை சார்பில் கேட்டுக் கொள்ளபட்டது.