News May 14, 2024

ரயிலில் இருந்து தவறி விழுந்த குழந்தை

image

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தின் 10 – வது நடைமேடையை நேற்று மும்பையில் இருந்து வந்த எக்ஸ்பிரஸ் ரயில் நெருங்கி கொண்டிருந்தது. அப்போது ரயிலின் கதவு அருகே நின்று விளையாடி கொண்டு இருந்த கடலூர் மாவட்டம் பண்ருட்டியை சேர்ந்த ரவிக்குமார் என்பவரின் ஒன்றரை வயது குழந்தை படிக்கட்டு வழியாக தவறி வெளியே விழுந்தது. அதிர்ஷ்ட வசமாக சிறு காயங்களுடன் குழந்தை உயிர் தப்பியது.

Similar News

News November 20, 2025

சென்னையில் வாக்காளர் உதவி மையங்கள்

image

சென்னை மாவட்டத்திற்குட்பட்ட அணைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்திற்க்கான கணக்கீட்டு படிவங்களை வாக்காளர்கள் பூர்த்தி செய்வதற்கு உதவிடும் வகையில் வாக்காளர் உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 18.11.2025 முதல் தொடங்கிய இந்த உதவி மையங்கள் 25.11.2025 காலை 10 மணி முதல் 6 மணி வரை செயல்படும். இந்த உதவி மையங்களில் சம்மந்தப்பட்ட பகுதியின் வாக்காளர்கள் பயன்படுத்தலாம்

News November 20, 2025

மீனவ இளைஞர்களுக்கு குடிமைப்பணி தேர்வு ஆயத்த பயிற்சி

image

சென்னை மாவட்டத்தைச் சேர்ந்த மீனவ பட்டதாரி இளைஞர்கள் குடிமை பணி போட்டி தேர்வுக்கான ஆயத்த பயிற்சியில் சேர்ந்து பயன் பெறலாம். சேர www.fisheries.tn.gov.in விண்ணப்ப படிவங்களை பதிவிறக்கம் செய்து சின்ன நீலாங்கரையில் உள்ள மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை, உதவி இயக்குநர் அலுவலகத்திற்கு வரும் 25 – ம் தேதிக்குள் அனுப்பவும் என சென்னை கலெக்டர் ரஷ்மி சித்தார்த் ஜகடே தெரிவித்துள்ளார்.

News November 20, 2025

சென்னை ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

image

சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே வெளியிட்ட செய்திக் குறிப்பில், நீண்ட காலமாக உரிமை கோரப்படாத வங்கி வைப்புத் தொகைகள், காப்பீட்டுத் தொகைகள், பங்கு தொகைகள் ஆகியவற்றை உரியவர்களுக்கு ஒப்படைக்கும் முகாம் நாளை (நவ.21) வெள்ளிக்கிழமை காலை 11 மணியளவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற உள்ளதாக தெரிவித்தார். ஷேர் பண்ணுங்க

error: Content is protected !!