News May 14, 2024
காங்., தேசிய ஊடகப் பிரிவு ஒருங்கிணைப்பாளர் நியமனம்

காங்கிரஸ் கட்சியின் தேசிய ஊடகப் பிரிவு ஒருங்கிணைப்பாளராக சுப்ரியா பரத்வாஜை நியமித்து அக்கட்சி தலைமை அறிவித்துள்ளது. முன்னதாக, தேசிய ஊடகப் பிரிவு ஒருங்கிணைப்பாளராக இருந்த ராதிகா கெரா, திடீரென கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தார். அத்துடன், கட்சித் தலைவர்கள் தனக்கு பாலியல் தொல்லை அளித்ததாக அடுக்கடுக்கான பல குற்றச்சாட்டுகளையும் முன்வைத்து பரபரப்பை ஏற்படுத்தினார்.
Similar News
News March 24, 2026
மருத்துவப் படிப்பில் 10% இட ஒதுக்கீடு: EPS

மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு உரிய வாய்ப்பு கிடைத்திட, 2020-ல் அப்போதைய அதிமுக அரசு 7.5% இட ஒதுக்கீட்டை அமல்படுத்தியது. இந்நிலையில், அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் 7.5% இடஒதுக்கீடு 10% ஆக உயர்த்தப்படும் என EPS வாக்குறுதி அளித்துள்ளார். 7.5% இடஒதுக்கீட்டால் கடந்த 6 ஆண்டுகளில் அரசுப்பள்ளி மாணவர்கள் அதிகளவில் மருத்துவப் படிப்பில் சேர்ந்துள்ளதாக கல்வியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
News March 24, 2026
நாடு முழுவதும் லாக் டவுன்.. இந்த நாள் ஞாபகம் இருக்கா?

வெளியூரில் தங்கி வேலை பார்த்து கொண்டிருந்தோர் சொந்த ஊர் செல்ல ஆயத்தமாகினர். 3 மாதங்களுக்கு தேவையான பலசரக்குகளை வாங்க கடைகள் முன் மக்கள் குவிந்தனர். ஏனென்றால், ‘நாடு முழுவதும் லாக் டவுன்’ என PM மோடி, 2020-ல் இதே நாளில் தான் அறிவித்தார். இந்நிலையில், போர் பதற்றம் காரணமாக தற்போது நிலவும் கேஸ் தட்டுப்பாட்டால் மீண்டும் லாக் டவுன் வருமோ என்று பலரும் கருத்துகளை SM-ல் கருத்து பகிர்ந்து வருகின்றனர்.
News March 24, 2026
வெயில்ல போகலனாலும் முகம் கருக்குதா? இதுதான் காரணம்

➤PCOS, தைராய்டால் ஹார்மோன் மாற்றம் ➤செல்கள் இறப்பால் பிக்மண்டேஷன் ➤மன அழுத்தம், தூக்கமின்மை ➤வைட்டமின் B12, C, E குறைபாடு ➤நீரிழிவு நோய் ➤போனில் இருந்து வெளியாகும் Blue light ➤சருமப் பராமரிப்பு பொருள்களால் ஏற்படும் பக்கவிளைவுகள் காரணமாக முகம் கருப்பாகலாம். முகம் பளபளப்பு பெற வெறும் கிரீம்களை மட்டும் பயன்படுத்தாமல், டாக்டரிடம் சென்று மேலே குறிப்பிட்டிருக்கும் பிரச்னைகளை சரிசெய்யுங்கள். SHARE.


