News May 14, 2024
‘கூலி’ படத்தின் படப்பிடிப்பு ஜூன் மாதம் தொடங்குகிறது

ரஜினி நடிக்கும் ‘கூலி’ படத்தின் படப்பிடிப்பு, வரும் ஜூன் 3ஆம் தேதி சென்னையில் தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ‘வேட்டையன்’ படத்தின் படப்பிடிப்பு நேற்றுடன் நிறைவடைந்த நிலையில், அடுத்த படத்திற்கான படப்பிடிப்பை மூன்றே வாரங்களில் ரஜினி தொடங்குகிறார். இது ரஜினியின் 172ஆவது படமாகும். இப்படத்தில் பெண் கதாபாத்திரங்களுக்கு அதிக முக்கியத்துவம் இருப்பதாக கூறப்படுவதால், எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
Similar News
News March 19, 2026
தேர்தல் நேரத்தில் ‘அமைதிப்படை’ ரீ-ரிலீஸ்

தமிழில் எத்தனையோ அரசியல் நையாண்டி படங்கள் வந்தாலும், எப்போதுமே டாப்பில் இருப்பது ‘அமைதிப்படை’ படம்தான். 1994-ல் வெளியான இப்படம் இன்றைய காலகட்டத்திற்கு பொருத்தமாக இருப்பதுதான் தனிச் சிறப்பு. அப்படிப்பட்ட ‘அமைதிப்படை’ ஏப்ரல் 10-ம் தேதி ரீ-ரிலீஸ் செய்யபடுகிறது. இதன் புதிய டிரெய்லர் மார்ச் 30-ம் தேதி வெளியாகிறது. தேர்தல் நேரத்தில் படம் வருவதால் நல்ல வைப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
News March 19, 2026
தவெகவுடன் கூட்டணி அமைக்க ரங்கசாமிக்கு வலியுறுத்தல்

புதுச்சேரி NDA-வில் லட்சிய ஜனநாயக கட்சியை இணைப்பதில் பாஜக, NR காங்கிரஸ் இடையே கருத்து வேறுபாடு உள்ளது. இதனால் தொகுதி பங்கீட்டில் இழுபறியில் நீடிக்கிறது. இதனிடையே CM ரங்கசாமி தலைமையிலான நடந்த அக்கட்சியின் ஆலோசனை கூட்டத்தில் நிர்வாகிகள் தவெகவுடன் கூட்டணி அமைக்க வலியுறுத்தியதாக கூறப்படுகிறது. முக்கிய முடிவு எடுப்பதற்கு முன் ரங்கசாமி சேலத்திலுள்ள அப்பா பைத்தியம் சாமி கோவிலுக்கு ரங்சாமி சென்றுள்ளார்.
News March 19, 2026
ஒவ்வொரு துளி ரத்தத்திற்கும் ஒரு விலை உண்டு: ஈரான்

தேசிய பாதுகாப்புத் தலைவர் அலி லாரிஜானியின் படுகொலைக்குப் பழிவாங்குவதாக ஈரானின் உச்ச தலைவர் மொஜ்தபா கமெனி சூளுரைத்துள்ளார். இதுபோன்ற தீவிரவாத நடவடிக்கைகள் எதிரிகளின் எப்படிப்பட்டவர்கள் என்பதை காட்டுவதாகவும், இதற்கான நீதி நிச்சயம் வழங்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். சிந்திய ஒவ்வொரு துளி ரத்தத்திற்கும் அமெரிக்காவும் இஸ்ரேலும் விலை கொடுக்கும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.


