News March 12, 2026
தனி சின்னத்திற்காக சமரசமா? வைகோ

PM மோடி 2029-க்கு பிறகு அவரது பதவி நாற்காலியில் இருந்து தூக்கி எறியப்படுவார் என வைகோ பேசியுள்ளார். தனி சின்னத்தில் போட்டியிடுவதற்காக சமரசம் செய்யப்பட்டதா என்ற கேள்விக்கு<<19354958>>, கட்சியின் பதிவை பாதுகாப்பதற்காக ஒரு தனிச்சின்னத்தில் போட்டியிடுகிறோம்.<<>> இதில் சமரசம் என்ற பேச்சுக்கே இடமில்லை என்றார். தொகுதி பங்கீட்டில் சுமுகமான உடன்பாடு ஏற்பட்டு தாங்கள் மகிழ்ச்சியோடு ஏற்றுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
Similar News
News April 10, 2026
கொசு பேட்டால் டிவிக்கு ஆபத்து

உங்கள் வீட்டில் கொசு பேட் இருக்கா? கொசு பேட்டில், கொசுவை கொல்ல ஏற்படும் தீப்பொறி, ஒரு மினி மின்காந்த துடிப்பை உருவாக்குகிறது. இது LED/OLED டிவிகளின் திரையில் உள்ள டிரான்சிஸ்டர்கள் & T-Con போர்டை சேதப்படுத்தும் தன்மை கொண்டது. இதனால், ஸ்கிரீனில் கருப்புக் கோடுகள்(அ)வட்டங்கள் ஏற்படலாம். சில நேரம் ஸ்கிரீன் முற்றிலும் கூட செயலிழக்கலாம். ஆகவே, டிவி அருகே கொசு பேட் பயன்படுத்துவதை தவிருங்கள். SHARE IT
News April 10, 2026
IPL டாஸ்: ராஜஸ்தான் அணி பவுலிங்

RCB -க்கு எதிரான ஆட்டத்தில் RR டாஸ் வென்று பவுலிங் தேர்வு செய்துள்ளது. மழையின் காரணமாக டாஸ் ஒரு மணி நேரம் தள்ளிப்போன நிலையில், போட்டி 8.15 மணிக்கு தொடங்குகிறது. இதுவரை தோல்வியே சந்திக்காத அணிகளுக்கு இடையிலான மோதல் என்பதால் இன்றைய ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது என எதிர்பார்க்கலாம்.
News April 10, 2026
இந்தியாவின் இளம் வீரர் மறைந்தார். கண்ணீர் அஞ்சலி

நாம் நிம்மதியாக தூங்குவதற்காக, எல்லையில் தூக்கம், பசி மறந்து தங்களது வாழ்வை அர்ப்பணிப்பவர்கள் ஏராளம். தேசத்திற்கு பணியாற்றிய அப்படிப்பட்ட ஒரு இளம் வீரனை இழந்துள்ளோம். பிஹாரைச் சேர்ந்த CRPF வீரர் ராகேஷ் குமார், நக்சல் எதிர்ப்பு ஆபரேஷனில் வீரமரணம் அடைந்துள்ளார். ராணுவ மரியாதையுடன், இந்த மக்கள் நாயகனின் உடல் சொந்த ஊருக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. இவரை போன்றோரின் தியாகத்தை போற்றுவோம். SALUTE


