News March 12, 2026
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: இடுக்கண் அழியாமை ▶குறள் எண்: 630 ▶குறள்: இன்னாமை இன்பம் எனக்கொளின் ஆகுந்தன் ஒன்னார் விழையுஞ் சிறப்பு. ▶பொருள்: துன்பத்தை இன்பமாகக் கருதும் மனஉறுதி கொண்டவர்களுக்கு, அவர்களது பகைவர்களும் பாராட்டுகிற பெருமை வந்து சேரும்.
Similar News
News March 31, 2026
சுங்க கட்டண உயர்வு மக்களை சுரண்டும் செயல்: காங்கிரஸ்

<<19520486>>சுங்க கட்டணம் <<>>உயர்வால் அத்தியாவசியப் பொருள்களில் விலை அதிகரிக்கும் அபாயம் உள்ளதாக காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது. செலுத்திய கட்டணத்திற்கே உரிய வசதி கிடைக்காமல் இருக்கும் நிலையில், கட்டணத்தை மேலும் உயர்த்துவது நேரடியாக மக்களை சுரண்டும் செயல் எனவும் சாடியுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் உயரும் சுங்கக் கட்டணத்தால், மாநிலப் போக்குவரத்து கழகங்கள் நிதி நெருக்கடிக்கு உள்ளாகக்கூடும் எனவும் கூறியுள்ளது.
News March 31, 2026
கடன் தள்ளுபடி.. சற்றுமுன் வெளியான மகிழ்ச்சி செய்தி

இன்றைய திருவாரூர் தேர்தல் பிரசாரத்தில் விவசாயக் கடன் தள்ளுபடி (அ) வட்டி தள்ளுபடி தொடர்பான வாக்குறுதியை ஸ்டாலின் வெளியிடுவார் என நம்புகிறோம் என்று CPM மாநிலச் செயலாளர் சண்முகம் தெரிவித்துள்ளார். மிகவும் எதிர்பார்த்த நகைக்கடன் தள்ளுபடி வாக்குறுதியை திமுக, அதிமுக ஆகிய 2 கட்சிகளும் வெளியிடவில்லை. அதேநேரம், கூட்டுறவு வங்கி பயிர்க் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என அதிமுக அறிவித்துள்ளது.
News March 31, 2026
விஜய்யின் ரோடு ஷோவுக்கு NO சொன்ன ECI

<<19524417>>திருச்சி கிழக்கில்<<>> நாளை மறுநாள் பிரசாரம் செய்ய விஜய்க்கு போலீஸ் அனுமதி அளித்துள்ளது. நண்பகல் 12 மணி – மாலை 4 மணி வரை அவர் பிரசாரம் மேற்கொள்ள நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. அதேசமயம் ரோடு ஷோ நடத்தக்கூடாது உள்ளிட்ட நிபந்தனைகளும் விதிக்கப்பட்டுள்ளது. பிரசாரத்துக்கு முன்னதாக திருச்சி கிழக்கில் விஜய் வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளார்.


