News May 14, 2024
தஞ்சாவூர் மாவட்டத்தில் மழை

குமரிக்கடல் பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் பரவலாக மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி மாலை 4 மணி வரை தஞ்சாவூர் மாவட்டத்தில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News March 14, 2026
அனைத்து தபால் நிலையங்களிலும் ஆதார் சிறப்பு முகாம்!

கும்பகோணம் தபால் கோட்டத்தில் உள்ள தபால் நிலையங்களில் ஆதார் சேவை வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி வருகிற மார்ச்.30ஆம் தேதி வரை கும்பகோணம் தலைமை நிலையம், மேலக்காவேரி தலைமை நிலையம், கும்பகோணம் கோட்டத்தில் சுவாமிமலை, ஆடுதுறை, நாச்சியார்கோவில், பட்டீஸ்வரம், பந்தநல்லூர் ஆகிய துணை தபால் நிலையங்களிலும் ஆதார் சிறப்பு முகாம் நடைபெறுகிறது. இதனை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
News March 14, 2026
தஞ்சாவூர்: அம்ரித் பாரத் ரயிலுக்கு வரவேற்பு!

நாகர்கோவில் – ஹைதராபாத் இடையே இயக்கப்படும் புதிய அம்ரித் பாரத் அதிவிரைவு ரயில் இன்று காலை தஞ்சாவூர் ரயில் நிலையத்திற்கு வந்தடைந்தது. இந்த புதிய ரயில் சேவையை வரவேற்கும் விதமாக, காவிரி டெல்டா ரயில் பயணிகள் சங்கத்தினர் ரயில் ஓட்டுநர்களுக்கு சால்வை அணிவித்தும், பயணிகளுக்கு இனிப்புகள் வழங்கியும் உற்சாகமாக கொண்டாடினர்.
News March 14, 2026
தஞ்சாவூர்: விபத்தில் இளைஞர் பரிதாப பலி

சேலம் மாவட்டம் நாயக்கம்பட்டியை சேர்ந்தவர் அஜித்குமார்(25). கூகித் தொழிலாளியான இவர், திருவோணத்தை அடுத்துள்ள கலியரான்விடுதியில் தங்கி விவசாயப் பணி செய்து வந்துள்ளார். இந்நிலையில் அஜித்குமார், ஊரணிபுரத்திற்கு பைக்கில் சென்றபோது, சாலையோர தடுப்பு கம்பில் மோதியுள்ளார். இதில், தூக்கி வீசப்பட்ட அவர், சம்ப இடத்திலே படுகாயமடைந்து பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து திருவோணம் போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.


