News May 14, 2024

டி20 உலகக் கோப்பைக்கான வங்கதேச அணி அறிவிப்பு

image

டி20 உலகக் கோப்பைத் தொடருக்கான 17 பேர் கொண்ட அணியை, வங்கதேச கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. நஜ்முல் ஹொசைன் (கேப்டன்), தஸ்கின் அகமது, லிட்டன் தாஸ், சௌமியா சர்க்கார், தன்சித் தமீம், ஷாகிப் அல் ஹசன், தவ்ஹித் ஹ்ரிடோய், மஹ்முதுல்லா, ஜேக்கர் அலி, தன்வீர் இஸ்லாம், மஹேதி ஹசன், ரிஷாத் ஹொசைன், முஸ்தாப் ஹொசைன், முஸ்தஃபிசூர் ரஹ்மான், தன்சிம் சாகிப் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர்.

Similar News

News March 22, 2026

யார் இந்த தி.வேல்முருகன்?

image

திருவொற்றியூர் பாமக நகரச் செயலாளராக அரசியலுக்குள் நுழைந்தார். 1996-ல் அதே தொகுதியில் வேட்பாளராக முதல்முறையாக அரசியல் களம் கண்டார். 2001, 2006-ல் பண்ருட்டி பாமக MLA-வாக வெற்றி பெற்ற அவர், 2011-ல் நெய்வேலியில் போட்டியிட்டு தோல்வியுற்றார். 2012-ல் கட்சிக்கு எதிராக செயல்பட்டதாக பாமகவிலிருந்து நீக்கப்பட்ட வேல்முருகன், அதே ஆண்டு தமிழக வாழ்வுரிமை கட்சியை தொடங்கினார். 2021-ல் பண்ருட்டி தவாக MLA ஆனார்.

News March 22, 2026

BREAKING: அதிமுகவுடன் கூட்டணி இல்லை

image

திமுக <<19446966>>கூட்டணியிலிருந்து விலகிய வேல்முருகன்<<>>, பாஜக தலைமையிலான NDA கூட்டணியில் இணையப்போவதில்லை என விளக்கம் அளித்துள்ளார். மேலும், EPS தரப்பினர் தன்னுடன் பேச்சுவார்த்தை நடத்துவதாகவும், 3 தொகுதிகள் வரை ஒதுக்க முன்வருவதாகவும் வெளியான தகவலில் உண்மை இல்லை எனவும் தெரிவித்துள்ளார். தமிழ் தேசிய அமைப்புகளுடன் ஆலோசனை நடத்திய பிறகு தனது அடுத்தகட்ட நகர்வை விரைவில் அறிவிப்பதாக கூறியுள்ளார்.

News March 22, 2026

அவர் செத்தது எனக்கு மகிழ்ச்சி: டிரம்ப்

image

FBI முன்னாள் இயக்குநர் ராபர்ட் முல்லர் (81) 2 நாள்களுக்கு முன் காலமானார். இந்நிலையில், ராபர்ட் முல்லர் இறந்ததில் தான் மகிழ்ச்சியடைவதாக டிரம்ப் தெரிவித்துள்ளார். முல்லர் இறந்தது நல்லது; அவரால் இனி அப்பாவி மக்களை காயப்படுத்த முடியாது எனவும் கூறியுள்ளார். 2016ம் ஆண்டு டிரம்ப் வெற்றிக்கு பின்னால் ரஷ்யாவின் உதவி இருந்ததாக எழுந்த குற்றச்சாட்டு குறித்து முல்லர் விசாரணை நடத்தியது குறிப்பிடத்தக்கது

error: Content is protected !!