News May 14, 2024
மீன் பிடித்த வாலிபர் தண்ணீரில் மூழ்கி பலி

திருவாடானை: செவிலியேந்தலைச் சேர்ந்த அசோக் குமார் (40) கோவையில் புரோட்டா மாஸ்டராக வேலை செய்து வந்தார். ஊருக்கு வந்த நிலையில் வீட்டின் எதிரில் இருந்த ஊரணியில் மீன்பிடித்தபோது நீரில் மூழ்கி மயங்கினார். தீயணைப்புத் துறையினர் மீட்டு திருவாடானை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவரை பரிசோதித்த மருத்துவர் அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தார். திருவாடானை போலீசார் அவரது உடலை மீட்டு விசாரணை நடத்தினர்.
Similar News
News September 13, 2025
ராமநாதபுரம்: வீணாகிய ரூ.57 கோடி திட்டம்

ராமேஸ்வரம் கோயில் அக்னி தீர்த்த கடலில் தினமும் ஏராளமான பக்தர்கள் புனித நீராடுகின்றனர். தீர்த்தம் அருகே விடுதிகளிலிருந்து கழிவுநீர் கலந்து துர்நாற்றம் வீசியது. இதை விர்க்க 2021ல் பாதாள சாக்கடை திட்டம் அமைத்து 2 மாதங்களுக்கு முன்பயன்பாட்டிற்கு வந்தது.ஆனால் நேற்று மீண்டும்அக்னி தீர்த்த கடலில் திடக்கழிவு நீர் கலந்ததால் துர்நாற்றம் வீசியது. இதனால் ரூ. 57 கோடியில் அமைத்த பாதாள சாக்கடை திட்டம் வீணாகியது.
News September 13, 2025
செப்டம்பர் 15 – முன்னாள் முதல்வர் பிறந்தநாள் விழா கொண்டாட்டம்

செப்டம்பர் 15ஆம் தேதி முன்னாள் முதல்வர் அறிஞர் அண்ணா அவர்களின் 117 வது பிறந்தநாள் விழா மாவட்ட முழுவதும் கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில் திமுக மாவட்ட கழக செயலாளர் முத்துராமலிங்கம் அனைத்து பேரூர் ஒன்றிய நகர நிர்வாகிகள் அனைவரையும் அண்ணா திருஉருவ படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தி “தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்” என்ற உறுதிமொழியை அனைவரும் எடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளார்.
News September 13, 2025
ராமேஸ்வரத்திற்கு சிறப்பு ரயில் இயக்க கோரிக்கை

ராமேஸ்வரத்தில் ஆடி புரட்டாசி மற்றும் தை அமாவாசை உள்ளிட்ட தினங்களில் உள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வழிபாடு நடத்த வருகின்றனர். எனவே, செப்டம்பர் 21ஆம் தேதி மகாளய அமாவாசை கொண்டாடப்பட இருப்பதால் ரயில் பயணிகள் சங்கம் சார்பாக மதுரையில் இருந்து ராமேஸ்வரத்திற்கு இரு மார்க்கமாக சிறப்பு ரயில் இயக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.