News May 14, 2024
பிளஸ் 1 தேர்வில் தனியார் பள்ளி மாணவர்கள் அசத்தல்

பதினோராம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று அறிவிக்கப்பட்டன. திருத்தணி தளபதி கே.விநாயகம் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி மாணவி உமா மகேஸ்வரி 574, ஆபிநயா 568 மற்றும் மோனிகா 556 மதிப்பெண்களை பெற்று முதல் மூன்று இடங்களை பிடித்தனர். மேலும் 21 மாணவர்கள் நல்ல மதிப்பெண் பெற்று அசத்தியுள்ளனர். மாணவர்களுக்கு பள்ளி நிர்வாகம் சார்பில் வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்து வருகின்றனர்
Similar News
News July 6, 2025
திருவள்ளூர் இரவு ரோந்து போலீசார் விவரங்கள் வெளியீடு

திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று இரவு 11.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.
News July 6, 2025
பொன்னியில் சிறப்புரை ஆற்றிய அமைச்சர்

இன்று மாலை பொன்னேரி மற்றும் கும்மிடிப்பூண்டி சட்டமன்ற பாக நிலை முகவர்கள் (BLA2) ஆலோசனைக் கூட்டத்தில் அமைச்சர் நாசர் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். மேலும் திமுக துணை பொதுச் செயலாளர் ஆ.ராசா எம்பி அவர்கள் பங்கேற்று கருத்துரை வழங்கினார். உடன் கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் கோவிந்தராஜன் மற்றும் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் ரமேஷ் ராஜ் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
News July 6, 2025
திருவள்ளூர் வானில் சர்வதேச விண்வெளி நிலையம்: நாசா தகவல்

சர்வதேச விண்வெளி மையம் பூமியிலிருந்து சுமார் 400 கி.மீ உயரத்தில் மணிக்கு 16முறை பூமியைச் சுற்றி வருகிறது. இந்த விண்வெளி மையத்தை சில சமயங்களில் வெறும் கண்ணால் பார்க்கலாம் என நாசா தெரிவித்துள்ளது. அதன்படி, ஜூலை 6முதல்10 வரை திருவள்ளூர் மக்கள் இரவு 8மணி முதல் 8.06மணி வரை வானில் காண முடியும் என நாசா அறிவித்துள்ளது. இது ஒரு அரிய வானியல் நிகழ்வாகும். இதை டக்குனு நண்பர்களுக்கு ஷேர் பண்ணி பாக்க சொல்லுங்க!