News May 14, 2024

ஐபிஎல் அணிகளுக்கு பின்னடைவு

image

உலகக் கோப்பை பயிற்சிக்காக இங்கிலாந்து வீரர்கள் நாடு திரும்புவதால், ஐபிஎல் அணிகளுக்கு பெரும் பின்னடைவு ஏற்படும் என கிரிக்கெட் விமர்சகர்கள் தெரிவித்து வருகின்றனர். ஜாஸ் பட்லர், வில் ஜாக்ஸ், ஃபில் சால்ட், மொயின் அலி உள்ளிட்ட முக்கியமான வீரர்கள் தொடரில் இருந்து விலகுவதால், CSK, RR, KKR, SRH போன்ற அணிகள் எஞ்சியுள்ள போட்டிகளில் தடுமாற வாய்ப்புள்ளது. எந்த இங்கி., வீரரால் பெரும் பின்னடைவு ஏற்படும்?

Similar News

News March 18, 2026

புதுச்சேரியில் என்.ஆர் காங்கிரஸ் எச்சரிக்கை

image

புதுச்சேரியில் என்.ஆர் காங்கிரஸ் கட்சி 16 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை தேர்வு செய்து, வேட்பு மனு தாக்கல் செய்ய தயாராக உள்ளதாக பொதுச்செயலாளர் ஜெயபால் தெரிவித்துள்ளார். மேலும், தங்கள் நிபந்தனைகளை பாஜக ஏற்கவில்லை என்றால், தவெகவுடன் கூட்டணி அமைத்து, அந்த கட்சிக்கு 10 இடங்களை ஒதுக்கி தேர்தலை சந்திக்கத் தயார் என்றும் அவர் கூறினார்.

News March 18, 2026

திருமணம் செய்யாமல் உறவு.. தமிழ் நடிகை விருப்பம்

image

திருமணம் செய்துகொள்ளாமல் உறவில் இருப்பதே நல்லது எனவும் அதையே தான் விரும்புவதாகவும் நடிகை ஐஸ்வர்யா லட்சுமி தெரிவித்துள்ளார். வாழ்க்கைத் துணை வேண்டும் என்பது உண்மை தான்; ஆனால், சேர்ந்து வாழும்போது இருவருக்குமே நிம்மதி இல்லாத ஒரு நிலை வரக்கூடாது. அண்மைக் காலமாக திரையுலகில் பலரும் விவாகரத்து பெற்று வரும் நிலையில், ஐஸ்வர்யாவின் இந்த கருத்து SM-ல் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. உங்கள் கருத்து என்ன?

News March 18, 2026

FLASH: விசிக தொகுதிப் பங்கீடு இன்று இறுதியாகிறது!

image

<<19413921>>திமுகவில் 6 கட்சிகளுக்கு<<>> தொகுதிப் பங்கீடு இறுதியான நிலையில், இன்று மாலை ஸ்டாலினை திருமாவளவன் நேரில் சந்தித்து பேசுகிறார். அப்போது தொகுதிப் பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த முறை 6 தொகுதிகளில் போட்டியிட்ட விசிக 4-ல் வென்றது. இம்முறை கூடுதல் தொகுதிகள் வேண்டும் என திருமாவளவன் நெருக்கடி கொடுத்து வருகிறார். அதனால் தான் தொகுதிப் பங்கீட்டில் இழுபறி நீடித்து வந்தது.

error: Content is protected !!