News May 14, 2024
11ஆம் வகுப்பு மறுதேர்வு தேதி அறிவிப்பு

11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலை 9.30 மணிக்கு வெளியானது. இதில், 8,11,172 மாணவர்கள் தேர்வெழுதிய நிலையில், 7,39,539 பேர் (91.17%) தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்நிலையில், தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு ஜூலை 2ஆம் தேதி முதல் மறுதேர்வு நடைபெற உள்ளதாக பள்ளிகல்வித்துறை அறிவித்துள்ளது. இதற்கான தேர்வு அட்டவணை விரைவில் வெளியாகும் எனவும் கூறப்பட்டுள்ளது.
Similar News
News August 8, 2025
ராசி பலன்கள் (08.08.2025)

➤ மேஷம் – சுகம் ➤ ரிஷபம் – வரவு ➤ மிதுனம் – நன்மை ➤ கடகம் – சிரமம் ➤ சிம்மம் – பிரீதி ➤ கன்னி – பக்தி ➤ துலாம் – தெளிவு ➤ விருச்சிகம் – பாராட்டு ➤ தனுசு – வெற்றி ➤ மகரம் – நலம் ➤ கும்பம் – விருத்தி ➤ மீனம் – பரிசு.
News August 8, 2025
வைகோ-துரை வைகோ மோதல்?

பாஜக கூட்டணி தொடர்பாக வைகோ, துரை வைகோ இடையே மோதல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. பாஜக MP-க்களே அவ்வளவு எளிதாக மோடியை சந்தித்துவிட முடியாது என கூறப்படும் நிலையில், கடந்த 2 வாரத்தில் மட்டும் 2 முறை சந்தித்துள்ளார் துரை வைகோ. பாஜகவுடன் எந்த காலத்திலும் கூட்டணி இல்லை என வைகோ அறிவித்த நிலையில், இந்த சந்திப்பு நிகழ்ந்துள்ளது கவனம் ஈர்த்துள்ளது. பாமகவை போல மதிமுகவிலும் தந்தை-மகன் மோதல் ஏற்படுமா?
News August 8, 2025
வீட்டு லோன் வாங்கியோருக்கு ஹேப்பி நியூஸ்!

வங்கிகளுக்கான RBI-யின் ரெப்போ வட்டி முன்பே குறைக்கப்பட்டாலும், பல வங்கிகள் அதன் பயனை வாடிக்கையாளர்களுக்கு தரவில்லை. இதனால் வீட்டு லோன் எடுத்த பலரும், லோன் எடுத்தபோது இருந்த பழைய (உயர்ந்த) வட்டி விகிதத்திலேயே இருக்கின்றனர். அவர்கள் லோன் வாங்கிய வங்கியை அணுகி, வட்டியை குறைக்க கோரலாம். இல்லையெனில், குறைந்த வட்டி தரும் வங்கிக்கு லோனை மாற்றிக் கொள்ளலாம். இந்த வாய்ப்பை மிஸ் பண்ணாதீங்க.