News May 14, 2024
கட்டுமான பணிகள், தமிழக அரசு அதிரடி உத்தரவு

சுட்டெரிக்கும் கோடை வெயில் காரணமாக, தொழிலாளர்களின் உடல் நிலையை கருத்தில் கொண்டு, மே மாதம் இறுதி வரை, சென்னை மற்றும் மதுரையில் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை திறந்தவெளி கட்டுமான பணிகளை மேற்கொள்ளக் கூடாது என்று
அனைத்து கட்டுமான நிறுவனங்களுக்கும் “தொழிலக பாதுகாப்பு இயக்ககம் ” தற்போது உத்தரவிட்டுள்ளது.
Similar News
News September 12, 2025
மதுரை மாநகர் காவல்துறையின் இரவு ரோந்து பணி விவரம்

மதுரை மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் இன்று இரவு நேரங்களில் ரோந்து பணிக்கு செல்லும் அதிகாரிகளின் விவரங்களை வெளியிட்டுள்ளனர். தங்கள் குடியிருக்கும் பகுதிகளில் ஏதேனும் இரவு நேரங்களில் குற்றச்சம்பவங்களில் ஈடுபடும் நபர்களை உடனடியாக புகார் தெரிவிக்க காவல் கட்டுப்பாட்டு அறை எண்களுக்கும், காவல் அதிகாரி தொலைபேசி எண்களுக்கும் புகார் அளிக்கலாம்.
News September 12, 2025
மதுரை மாவட்ட இரவு ரோந்து போலீசார் விவரம்

மதுரை மாவட்டத்தில் இன்று(12.09.2025) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது அவசர கால எண்டான் 100ஐ தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் உங்கள் பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News September 12, 2025
ரயில் பாதைகள் மின்சார பாதைகளாக மாற்றம்

மதுரை கோட்டத்தில் ராமநாதபுரம் – ராமேஸ்வரம் ரயில் பிரிவு தவிர மற்ற அனைத்து ரயில் பாதைகளும் ஏற்கனவே மின்மயமாக்கப்பட்டுவிட்டன. ராமநாதபுரம் – ராமேஸ்வரம் ரயில் பாதையை மின் மயமாக்கும் பணிகள் சமீபத்தில் நிறைவு பெற்றது. இந்த புதிய மின் பாதையில் நாளை (செப் 13) முதன்மை தலைமை மின்சார பொறியாளர் கணேஷ் ஆய்வு நடத்த இருப்பதாக தென்னக ரயில்வே மதுரை கோட்டம் தெரிவித்துள்ளது.