News March 10, 2026
விஜய்யுடன் கூட்டணி.. DCM பதவி கேட்கிறாரா சசிகலா?

எதிரிகளையும், துரோகிகளையும் வீழ்த்தும் நோக்கில் புதிய கட்சியை தொடங்குவதாக கூறிய சசிகலா, வரும் தேர்தலில் தவெகவுடன் கூட்டணி அமைக்க முனைப்பு காட்டுகிறார். சசிகலாவின் உறவினரான ஜெய் ஆனந்த், தவெகவுடன் கூட்டணிப் பேச்சுவார்த்தை நடத்துவதாக கூறப்படுகிறது. தென் மாவட்டங்களில் போட்டியிட கணிசமான தொகுதிகளுடன், DCM பதவியையும் தவெகவிடம் டிமாண்டாக சசிகலா தரப்பு வைத்துள்ளதாம். இதுபற்றி விஜய் ஆலோசிக்கிறாராம்.
Similar News
News April 6, 2026
ஏப்ரல் 6: வரலாற்றில் இன்று

▶ 1919 – மகாத்மா காந்தி பொது வேலை நிறுத்தத்தை அறிவித்தார். ▶1930 – மகாத்மா காந்தி உப்பு சத்தியாகிரகத்தை முடித்து, கையளவு உப்பை எடுத்து ’நான் பிரிட்டிஷ் பேரரசின் அடித்தளத்தை அசைக்கிறேன்’ என அறிவித்தார். ▶1973 – திரைப்பட நடிகர் பிரசாந்த் பிறந்தநாள். ▶1815 – தமிழறிஞர் மீனாட்சி சுந்தரம் பிள்ளை பிறந்தநாள். ▶2011 – திரைப்பட நடிகை சுஜாதா நினைவுதினம். ▶2021 – பெரியாரிய அறிஞர் வே.ஆனைமுத்து நினைவு தினம்.
News April 6, 2026
மாமன்னன் மகன் நான் நிற்கிறேன்: லோகேஷ்

ராசிபுரம் தொகுதியில் தவெக வேட்பாளராக அதிமுக Ex சபாநாயகர் தனபாலின் மகன் லோகேஷ் தமிழ்செல்வன் போட்டியிடுகிறார். இந்நிலையில் அங்கு நடைபெற்ற வேட்பாளர் அறிமுக நிகழ்ச்சியில் பேசிய அவர், மாமன்னன் மகன் நான் நிற்கிறேன்; DCM நடித்த கேரக்டர் நான் தான் என பேசினார். அடுத்த 15 நாட்களில் வீடு வீடாக சென்று ஆதரவு திரட்டுவோம். இந்த முறை தேர்தலுக்கு பிறகு தமிழகத்தின் வண்ணமே மாறும் என கூறியுள்ளார். <<-se>>#TNElection2024<<>>
News April 6, 2026
ரத்தன் டாடா பொன்மொழிகள்

*இரும்பை யாராலும் அழிக்க முடியாது, அதன் துருவைத் தவிர. அதேபோல் ஒரு மனிதனை யாராலும் அழிக்க முடியாது, அவனது சொந்த சிந்தனையைத் தவிர. *எனக்கு மிகப்பெரிய சந்தோஷமே, ஒருவர் ஒரு காரியத்தை செய்ய முடியாது என்று சொன்னால், அதை செய்து காட்டுவது தான். *இறுதியில், நாம் எடுக்காத வாய்ப்புகளைப் பற்றி மட்டுமே வருத்தப்படுவோம். *மக்கள் உங்கள் மீது வீசும் கற்களைக் கொண்டு ஒரு நினைவுச்சின்னத்தை உருவாக்குங்கள்.


