News March 10, 2026
மயிலாடுதுறை: ஊழியரிடம் லட்ச கணக்கில் பணம் அபேஸ்

மதுரை சேர்ந்த தனியார் பெயிண்ட் நிறுவன ஊழியர் ஆறுமுகம்(54). இவர் மயிலாடுதுறையில் உள்ள வணிக நிறுவனங்களுக்கு அனுப்பிய பெயிண்டுக்கான தொகையை வசுலிக்க வந்த நிலையில், மயிலாடுதுறையில் உள்ள தனியார் விடுதியில் தங்கியுள்ளார். அப்போது அவர் வைத்திருந்த 1.90 லட்சம் வசூல் பணத்தை காணவில்லை. பின்னர் இதுகுறித்த புகாரின் பேரில், மயிலாடுதுறை போலீசார் வழக்கு பதிந்து cctv காட்சிகளை கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News March 13, 2026
மயிலாடுதுறை: ஆதார் அட்டை வைத்திருப்போர் கவனத்திற்கு

மயிலாடுதுறை மக்களே, உங்கள் ஆதார் அட்டையில் பெயர், முகவரி, பிறந்த தேதி மற்றும் மொபைல் எண் போன்றவற்றை மாற்ற இனி அரசு அலுவலகங்களுக்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை. நீங்கள் எந்த அலைச்சலும் இல்லாமல் வீட்டில் இருந்தபடியே<
News March 13, 2026
மயிலாடுதுறை மாவட்ட மக்களுக்கு எச்சரிக்கை

காவல்துறையிலிருந்து அழைப்பதாகவும், உங்கள் பெயரில் உள்ள பார்சல் கைப்பற்றப்பட்டு அதில் போதை பொருள் இருப்பதாக வரும் போலி அழைப்புகளை நம்பி மக்கள் பீதி அடைய வேண்டாம் என மயிலாடுதுறை மாவட்ட காவல்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர். மேலும் இது போன்ற சைபர் குற்றங்கள் குறித்து 1930 என்ற எண்ணில் உடனடியாக புகார் தெரிவிக்க போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.
News March 13, 2026
மயிலாடுதுறை: பைக் வாங்க விண்ணப்பிக்கலாம்

தமிழ்நாட்டில் உள்ள பள்ளிவாசல்களில் பணியாற்றும் உலமாக்களுக்கு, இருசக்கர வாகனம் வாங்க மானியம் வழங்கும் திட்டத்தில், மானிய தொகை ரூ.25,000 லிருந்து ரூ.50,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. பள்ளிவாசலில் பணியாற்றும் பேஷ் இமாம்கள், ஆலிம்கள், அரபி ஆசிரியர்கள் பூர்த்தி செய்த விண்ணப்பங்களை மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் 13.3.2026-க்குள் உரிய ஆவணங்களுடன் சமர்ப்பித்து பயன்பெறலாம்.


