News May 14, 2024
₹14,000 மகப்பேறு நிதியுதவி எப்போது கிடைக்கும்?

தமிழகத்தில் கர்ப்பிணியருக்கு ₹14,000 ரொக்கம், ₹4000 மதிப்புள்ள ஊட்டச்சத்து பெட்டகம் மகப்பேறு நிதியுதவி திட்டத்தின் மூலம் வழங்கப்படுகிறது. 2 ஆண்டுகளாக இதில் 2 லட்சத்துக்கும் அதிகமானோர் நிதியுதவி கிடைக்காமல் உள்ளனர். இதுகுறித்து அதிகாரிகள் கூறும்போது, மகப்பேறு நிதியுதவி விடுவிப்பதில் சில சிக்கல்கள் இருப்பதாகவும், தேர்தல் நடத்தை விதிகள் முடிவுக்கு வந்ததும் அதற்கு தீர்வு காணப்படும் எனவும் கூறினர்.
Similar News
News August 25, 2025
ஆணவக் கொலைக்கு எதிராக சட்டம் வேண்டும்: சத்யராஜ்

ஆணவக் கொலைகள் நடப்பதற்கு கண்டனம் தெரிவித்த நடிகர் சத்யராஜ், அதனை தடுக்க சட்ட இயற்ற வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அவர், காதல் என்பது மிகவும் எளிதான விஷயம் என்றும், இதற்கெல்லாம் கொலை செய்வது நியாயமில்லை என்றும் தெரிவித்தார். மனித வாழ்க்கையில் காதலும் காமமும் அத்தியாவசியமான விஷயம் என்றும் நடிகர் சத்யராஜ் குறிப்பிட்டார்.
News August 25, 2025
500 விக்கெட்கள்.. ஷகிப் அல் ஹசன் மைல்கல் சாதனை

வங்கதேச கிரிக்கெட் வீரர் ஷகிப் அல் ஹசன் டி20 போட்டிகளில் 500 விக்கெட்களை வீழ்த்தி சாதனை படைத்துள்ளார். கரீபியன் பிரிமியர் லீக் தொடரில் விளையாடிவரும் அவர், இன்று இமாலய மைல்கல்லை எட்டியுள்ளார். டி20 போட்டிகளில் இதற்கு முன்பு ரஷித் கான், பிராவோ, சுனில் நரைன், இம்ரான் தாஹிர் உள்ளிட்டோர் இந்த சாதனையை படைத்துள்ளனர். அதிகபட்சமாக ரஷித் கான் 660 விக்கெட்டுகளை வீழ்த்தி இருப்பது குறிப்பிடத்தக்கது.
News August 25, 2025
திமுக ஆட்சியில் விவசாயிகள் பாதிப்பு: இபிஎஸ்

திமுக ஆட்சியில் விவசாயிகளுக்கு எவ்வித நன்மையும் இல்லை என இபிஎஸ் விமர்சித்துள்ளார். திருச்சியில் பரப்புரை மேற்கொண்ட அவர், அதிமுக ஆட்சி காலத்தில் 5 ஆண்டுகளில் 2 முறை விவசாய கடன் தள்ளுபடி செய்யப்பட்டதாக தெரிவித்துள்ளார். அதிமுக ஆட்சியில் விவசாயிகள் நன்மை அடைந்ததாகக் குறிப்பிட்ட அவர், மீண்டும் ஆட்சிக்கு வந்தால் காவிரி, கொள்ளிடம் ஆற்றில் தடுப்பணைகள் கட்டப்படும் என உறுதியளித்தார்.