News March 10, 2026
மயிலாடுறையில் நாளை மின்நுகர்வோர் கூட்டம்!

மயிலாடுதுறை மின்வாரிய கோட்ட அலுவலகத்தில் நாளை(மார்.11) மின்நுகர்வோர் குறைதீர் கூட்டம் நடைபெற உள்ளது. இக்கூட்டமானது நாகை மின்பரிமான மேற்பார்வை பொறியாளர் காளிதாஸ் தலைமையில் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில், மின்நுகர்வோர் கலந்து கொண்டு, தங்களுடைய குறைகளை தெரிவிக்கலாம் என மயிலாடுதுறை மின்வாரிய செயற்பொறியாளர்(பொறுப்பு) ரேணுகா தெரிவித்துள்ளார்.
Similar News
News March 11, 2026
மயிலாடுதுறை: பிரதமர் மோடி வருகை – நிர்வாகிகள் ஆலோசனை

மயிலாடுதுறையில் உள்ள தனியார் மஹாலில் நேற்று பாஜக சார்பில் மயிலாடுதுறை மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் நாஞ்சில் பாலு தலைமை தாங்கினார். இதில் சிறப்பு அழைப்பாளராக சுதாகர் ரெட்டி கலந்து கொண்டு திருச்சிக்கு வருகை தரும் பிரதமர் மோடி நிகழ்வில் திரளாக கலந்து கொள்ள வேண்டும் என முடிவெடுத்தனர்.
News March 11, 2026
மயிலாடுதுறைக்கு புதிய ரயில் சேவை தொடக்கம்!

மயிலாடுதுறையில் இருந்து காரைக்குடிக்கு புதிய பேசஞ்சர் ரயில் சேவை தொடக்க விழா இன்று மாலை 4 மணி முதல் 6 மணி வரை நடைபெற உள்ளது. இவ்விழாவில், பிரதமர் மோடி காணொலி காட்சி வாயிலாக கலந்து கொண்டு ரயில் சேவையை தொடங்கி வைக்க உள்ளார். இந்த ரயில் மயிலாடுதுறையில் இருந்து மாலை 5.10 மணிக்கு புறப்பட்டு இரவு 9 மணிக்கு காரைக்குடிக்கும், அங்கிருந்து காலை 6 மணிக்கு புறப்பட்டு காலை 10:30க்கு மயிலாடுதுறைக்கு வந்தடையும்
News March 11, 2026
மயிலாடுதுறை: தலையில் கல்லை போட்டு கொடூர கொலை

சீர்காழி, தென்பாதி அருகே கம்பி பிட்டரான நாகராஜ்(45) என்பவரும், அவரது நண்பரான நீலகண்டன்(25) என்பவரும் நேற்று மது அருந்தி உள்ளனர். அப்போது இருவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் நாகராஜ் தலையில் நீலகண்டன் கல்லை தூக்கி போட்டு கொலை செய்துள்ள்ளார். இதில் அவர் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்த சீர்காழி போலீசார் உடலை கைப்பற்றி. நீலகண்டனை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.


