News March 9, 2026
வங்கி கணக்கில் ₹10,000.. தமிழக அரசின் HAPPY NEWS

தமிழ்நாடு வணிகர் நல வாரியம் சார்பில் சிறு வணிகர்களுக்கு அரசு நிதி உதவி வழங்கி வருகிறது. அதில், முக்கியமாக சிறுகடை அமைப்பதற்காக வணிகர்களுக்கு ₹10,000 வழங்கப்பட்டு வருகிறது. வணிகர் நலவாரியத்தில் உறுப்பினர்களாக இருப்பவர்கள் விண்ணப்பித்து பயன்பெறுமாறு அரசு அறிவுறுத்தியுள்ளது. வணிகர் நல வாரியத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் (அ) அருகிலுள்ள வணிகர் நல வாரிய அலுவலகத்திற்கு சென்று விண்ணப்பிக்கலாம். SHARE IT
Similar News
News April 13, 2026
திருவள்ளூர் மாவட்ட தேர்தல் அலுவலர் அறிவிப்பு!

திருவள்ளூரில் 85 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் மற்றும் 40%க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்டோருக்கு வீடு தேடி சென்று வாக்கு பதிவு செய்யும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும், தேவையெனில் தபால் வாக்கு மற்றும் EVM மூலமாகவும் வாக்களிக்கும் வசதிகள் உள்ளன. மேலும் விவரங்களுக்கு 1800-425-8515, 7305158550 என்ற எண்களை தொடர்பு கொள்ளலாம் என திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர்/தேர்தல் அலுவலர் அறிவித்தார்.
News April 13, 2026
பிறந்த நாளிலேயே அடக்கம் செய்யப்பட்ட நடிகையின் உடல்

சீரியல் நடிகை சுபாஷினியின் மரணம் குறித்து உருக்கமான தகவல் வெளியாகியுள்ளது. பிறந்த நாளிலேயே (ஏப்.12) அவரது <<19638476>>உடல் அடக்கம் <<>>செய்யப்பட்டிருக்கிறது. வழக்கமாக குடும்பத்தினருக்கு மகிழ்ச்சியை கொடுக்கும் நாள், இந்தாண்டு சோகமான நாளாக மாறியுள்ளது. அதுமட்டுமின்றி, ஏப்.21-ம் தேதி அவருக்கு கல்யாண நாளாகும். சுபாஷினிக்கு மகிழ்ச்சிகரமான மாதமாக இருந்த ஏப்ரல், தற்போது குடும்பத்தினருக்கு பேரிடியாக அமைந்திருக்கிறது.
News April 13, 2026
பெட்ரோல், டீசல் விலை உயரும்… புதிய தகவல்

அமெரிக்க-ஈரான் பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததை அடுத்து, கச்சா எண்ணெய் விலை மீண்டும் பேரலுக்கு $100-ஐ தாண்டியுள்ளது. ஹார்முஸ் நீரிணை முற்றுகையிடப்பட்டால், கச்சா எண்ணெய் விலை $150-ஐ எட்டக்கூடும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். <<19636592>>டிரம்ப் அறிவிப்பு<<>> நடந்தால், தினசரி 12 மில்லியன் பேரல் கச்சா எண்ணெய் விநியோகம் பாதிக்கும். இதனால் உலகம் முழுவதும் பெட்ரோல், டீசல், கேஸ் விலை உயரும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.


