News March 9, 2026
‘திருச்சி என்றாலே வெற்றி’: CM ஸ்டாலின் புகழாரம்

சிறுகனூரர் திமுக மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: ‘திருச்சி தமிழகத்தின் மைய பகுதி மட்டும் அல்ல, இது கழகத்தின் மாநாட்டு பகுதி. திமுகவின் 12 மாநில மாநாடுகளில், மொத்தம் 7 மாநாடுகள் திருச்சியில் தான் நடந்துள்ளது. 1956 திருச்சி மாநாட்டில் தான் கழகம் தேர்தலில் போட்டியிடும் என முடிவெடுக்கப்பட்டது. திருச்சி என்றாலே திருப்பம், திருச்சி என்றாலே எழுச்சி, திருச்சி என்றாலே மகத்தான வெற்றி’ என்றார் அவர்.
Similar News
News March 19, 2026
திருச்சி மாவட்டத்தில் 155.8 மி.மீ மழை பதிவு!

திருச்சி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கோடை வெயில் சுட்டெரித்து வந்த நிலையில், நேற்று நள்ளிரவு முதல் இன்று அதிகாலை வரை பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது. இதில் அதிகபட்சமாக பொன்மலை பகுதியில் 25.6 மி.மீ மழை பதிவாகி உள்ளது. மேலும் மருங்காபுரி பகுதியில் 19.4 மி.மீ,, மணப்பாறை பகுதியில் 7 மி.மீ என மாவட்டம் முழுவதும் 155.8 மி.மீ மழை பதிவாகியுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
News March 19, 2026
திருச்சி: தேர்தல் பொது பார்வையாளர்கள் வருகை!

திருச்சி மாவட்டத்திற்கு உட்பட்ட 9 சட்டமன்ற தொகுதிகளுக்கும், இந்திய தேர்தல் ஆணையத்தால் பொது பார்வையாளர்கள், தேர்தல் செலவின பார்வையாளர்கள், போலீஸ் பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் திருச்சி டிவிஎஸ் டோல்கேட் பகுதியில் உள்ள அரசு சுற்றுலா மாளிகையில் முகாமிட்டுள்ளனர். இவர்களிடம் தேர்தல் நடத்தை விதிமீறல்கள் தொடர்பான புகார்களை தெரிவிக்கலாம் என மாவட்ட தேர்தல் அலுவலர் சரவணன் தெரிவித்துள்ளார்.
News March 19, 2026
சுய உதவிக்குழு, NGO கணக்குகளை கண்காணிக்க உத்தரவு

சட்டசபை தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளது. இதனால் திருச்சி மாவட்டத்தில் செயல்படும், மகளிர் சுய உதவிகுழுக்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் கணக்குகளில், வழக்கத்திற்கு மாறாக பணம் டெபாசிட் செய்யப்பட்டாலோ, திரும்ப எடுக்கப்பட்டாலோ அதனை கண்காணிக்க வேண்டும். அது தொடர்பாக மாவட்ட தேர்தல் அலுவலர்களுக்கு தகவல் அளிக்க வேண்டுமென வங்கியாளர்களுக்கு, மாவட்ட தேர்தல் அலுவலர் கலெக்டர் சரவணன் உத்தரவிட்டுள்ளார்.


