News May 14, 2024

தமிழகத்தில் அதிகபட்சமாக 8 செ.மீ., மழைப்பதிவு

image

கடந்த 24 மணி நேரத்தில் கோவை மாவட்டம் மக்கினாம்பட்டியில் அதிகபட்சமாக 8 செ.மீ., மழை பதிவாகியுள்ளது. பொள்ளாச்சி மற்றும் தூத்துக்குடியில் தலா 7 செ.மீ., மழைப் பொழிவு பதிவாகியுள்ளன. கோவை மாவட்டம் ஆழியார், விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர், திண்டுக்கல் மாவட்டம் நத்தம், தேனி மாவட்டம் வீரபாண்டி, நீலகிரி மாவட்டம் பார்வுட் ஆகிய பகுதிகளில் தலா 6 செ.மீ., மழை பதிவாகியுள்ளது.

Similar News

News March 11, 2026

CM ஸ்டாலினின் கூட்டத்தில் 2 பேர் மரணம்

image

திருச்சியில், நேற்று முன்தினம் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற திமுக மாநாட்டில் 2 பேர் மரணமடைந்தனர். புதுக்கோட்டை, மங்களநாட்டை சேர்ந்த ஜெயராமன்(67) மாநாட்டு திடலில் அமர்ந்திருந்தபோது நெஞ்சுவலி ஏற்பட்டு உயிரிழந்தார். அதேபோல், பெரம்பலூரை சேர்ந்த சரோஜா(61) மாநாட்டு மைதான வாயிலில் மயங்கி விழுந்து உயிரிழந்தார். இவ்விவகாரத்தை திமுக திட்டமிட்டு மறைத்துவிட்டதாக பாஜக, தவெகவினர் SM-ல் விமர்சித்து வருகின்றனர்.

News March 11, 2026

வீட்டு சிலிண்டர் புக்கிங்கிலும் சிக்கல்

image

வளைகுடா போர் பதற்றத்தால் நாடு முழுவதும் சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. நேற்று முதல் வணிக சிலிண்டர் புக்கிங் நிறுத்தப்பட்ட நிலையில், தற்போது வீட்டு உபயோக சிலிண்டர் புக்கிங்கிலும் சிக்கல் எழுந்துள்ளதாக புகார் எழுந்துள்ளது. செல்போன் மூலம் சிலிண்டர் புக் செய்ய முயன்றால், ‘சுவிட்ச் ஆப்’ என பதில் வருவதாக வாடிக்கையாளர்கள் கூறுகின்றனர். உங்கள் பகுதியில் இதுபோன்ற பிரச்னை இருக்கிறதா?

News March 11, 2026

இதனால் தான் சுதீஷுக்கு MP சீட் கொடுத்தாரா பிரேமலதா?

image

திமுக கொடுத்த MP சீட்டை முதலில் மூத்த நிர்வாகி ஒருவருக்கு கொடுக்கலாம் என தேமுதிக பிளான் செய்ததாக கூறப்படுகிறது. இதன்மூலம் கட்சி மீதான நன்மதிப்பு கூடும் என பிரேமலதா கணக்கு போட்டாராம். ஆனால் குறுக்கே வந்த சுதீஷ் இத்தனை நாள் கட்சிக்காக உழைத்த தனக்கு MP சீட்டை வழங்கவில்லை எனில் கட்சியை விட்டே விலகுவேன் என முறையிட்டதாக பேசப்படுகிறது. இதனாலேயே அவருக்கு அந்த MP சீட் கொடுக்கப்பட்டது என்கின்றனர்.

error: Content is protected !!