News March 9, 2026

BREAKING மானாமதுரை வழக்கு; இன்று மதியம் விசாரிப்பு.!

image

மானாமதுரையில் விசாரணைக் கைதி ஆகாஷ் உயிரிழந்த நிலையில், இழப்பீடு வழங்கக்கோரி வழக்கறிஞர் ஹென்றி திபேன் உயர்நீதிமன்ற மதுரை கிளையில், வழக்கு தொடர்ந்துள்ள நிலையில் இன்று மதியம் 02:30 மணிக்கு அவசர வழக்காக விசாரிக்கப்பட உள்ளது. மானாமதுரை காவல் நிலையத்தில் மார்ச்.5 முதல் 7 ம் தேதி வரை உள்ள CCTV காட்சிகளை பாதுகாப்பாக வைத்திருக்கவும், கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

Similar News

News March 13, 2026

சிவகங்கை: டிகிரி போதும்; ரூ.65,000 சம்பளத்தில் BANK வேலை.!

image

IDBI வங்கியில் காலியாக உள்ள Assistant Manager, Junior Assistant Manager பதவிகளுக்கான 1300 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. 21-30 வயதுடைய ஏதாவது ஒரு டிகிரி முடித்தவர்கள் மார்ச் 19ம் தேதிக்குள் இங்கு<> கிளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். இதற்கு சம்பளம் ரூ.65,000 வழங்கப்படும். எழுத்து தேர்வு மூலம் தகுதியான நபர்கள் நியமிக்கப்படுவர். வேலை தேடும் உங்க நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க.

News March 13, 2026

சிவகங்கை: அதிமுகவில் இணைந்த OPS அணியினர்

image

சிவகங்கை மாவட்டம், இளையான்குடி வடக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட ஓபிஎஸ் அணியினை சேர்ந்த உதயனூர் பொன்னுதுரை, கல்லனி மோகன் ஆகியோர் ஏற்பாட்டில் பலர் இன்று சிவகங்கை மாவட்ட கழகச் செயலாளர் மற்றும் PR.செந்தில்நாதன் தலைமையில் இளையான்குடி வடக்கு ஒன்றிய கழகச் செயலாளர் K.M.கோபி முன்னிலையில் திமுகவில் இணைந்தனர். இதில் அதிமுக நிர்வாகிகள் மற்றும் பொறுப்பாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

News March 13, 2026

மானாமதுரையில் மீண்டும் அரங்கேறிய சம்பவம்.!

image

மானாமதுரை கன்னார் தெருவைச் சேர்ந்த கார்த்திகேயன், நேற்று இரவு மாரியம்மன் கோயில் அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற போது, அதே பகுதியை சேர்ந்த பழனி என்பவர் ரோட்டில் நின்றதால் அவரை ஓரமாக நிற்க கூறியுள்ளார். இதில் ஆத்திரமடைந்த பழனி அரிவாளால் கார்த்திகேயன் முகத்தில் வெட்டினார். படுகாயமடைந்த அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் போலீசார் பழனியை தேடி வருகின்றனர்.

error: Content is protected !!