News March 9, 2026
கும்மிடிப்பூண்டி: திமுக மீது நிர்வாகி குற்றச்சாட்டு!

திருவள்ளூர்: கும்மிடிப்பூண்டி மேல் தெரு ஊராட்சி மன்றர் கௌரி சங்கர் வன்னியர் சமூகத்திற்கு கடந்த 40 ஆண்டுகளாக உரிய வாய்ப்புகள் மறுக்கப்பட்டுள்ளதாக குற்றஞ்சாட்டினார். சமூக முன்னேற்றத்திற்கு தேவையான பதவிகள் மற்றும் வாய்ப்புகள் வழங்கப்படவில்லை என அவர் தெரிவித்தார். இந்த விவகாரத்தை திமுக கவனத்தில் கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்தார்.
Similar News
News March 13, 2026
திருவள்ளூர்: குடும்பத்தில் பிரச்னையா?

நாளுக்கு நாள் குடும்பத்தில் பெண்களுக்கு நிகழும் வன்முறைகள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், அதனை தடுக்க அரசு சார்பாக பல்வேறு சேவைகள், நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. அதுபடி, திருவள்ளூர் மாவட்ட பெண்களுக்கு ஏதேனும் குடும்ப வன்முறை நேர்ந்தால், உடனே மாவட்ட குடும்ப வன்முறை தடுப்புச் சட்ட பாதுகாப்பு அலுவலர் எண்ணான 8098822551-ஐ அழைத்து புகார் அளிக்கலாம். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
News March 13, 2026
கும்மிடிப்பூண்டி அருகே பாலியல் வன்கொடுமை!

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே 45 வயது பெண், கணவரை பிரிந்து தனியாக வசித்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு அதே பகுதியில் உள்ள ஏரிக்கரை வழியாக நடந்து சென்றுள்ளார். அப்போது, மூன்று பேர் கொண்ட கும்பல், அப்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு தப்பிச் சென்றனர். இதுகுறித்து புகாரில் கும்மிடிப்பூண்டி மகளிர் போலீசார் ரஞ்சித், அவரது தம்பி முத்துகிருஷ்ணன், துளசிராமன் ஆகியோரை கைது செய்தனர்
News March 13, 2026
திருவள்ளூர்: ரூ.5 லட்சம் வரை இலவச மருத்துவ காப்பீடு!

முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், 1 குடும்பம் ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரை மருத்துவ காப்பீடு பெறலாம். குடும்ப அட்டை, ஆதார் அட்டை, வருமானச் சான்றிதழ் ஆகியவற்றுடன் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மருத்துவ அடையாள அட்டை வழங்கும் மையத்தில் பதிவு செய்து, அடையாள அட்டையை பெற்றுக் கொள்ளலாம். மேலும் தகவல்களுக்கு 1800 425 3993 அழைக்கவும். *ஷேர் பண்ணுங்க*


