News May 14, 2024

தமிழகத்தில் 2ஆம் இடம் பிடித்த ஈரோடு

image

11ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் சற்று முன் வெளியானது. ஈரோடு மாவட்டத்தில் 10,729 மாணவர்களும், 12,060 மாணவிகளும் தேர்வு எழுதினர். இதில், மொத்தம் 21,777 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்கள் 93.86% தேர்ச்சி பெற்றனர். மாணவிகள் 97.07% தேர்ச்சி பெற்றுள்ளனர். தமிழகத்தில் ஈரோடு மாவட்டம் 95.56% தேர்ச்சி பெற்று 2ஆம் இடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Similar News

News March 11, 2026

ஈரோடு: ரூ.2,40,000 சம்பளத்தில் வேலை ரெடி! உடனே APPLY

image

HPCL (இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட்) நிறுவனத்தில் காலியாக உள்ள 730 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. 18 – 45 வயதுகுட்பட்ட Diploma, Any Degree, B.E/B.Tech படித்தவர்கள் மார்ச் 25க்குள் இங்கு <>க்ளிக் செய்து<<>> விண்ணப்பிக்க வேண்டும். இதற்கு சம்பளம் ரூ.30,000 – 2,40,000 வரை சம்பளம் வழங்கப்படும். எழுத்துத் தேர்வு அடிப்படையில் தகுதியான நபர்கள் நியமனம் செய்யப்படுவர். SHARE IT.

News March 11, 2026

ஈரோட்டில் உங்க பெயரில் நிலம் இருக்கா? உடனே செக் பண்ணுங்க!

image

ஈரோடு மக்களே நில உரிமையாளர்கள் சிட்டா, புலப்படம் (FMB) மற்றும் அடங்கல் ஆகியவற்றைத் தனித்தனியாகப் பதிவிறக்கம் செய்வதற்குப் பதிலாக, இனி<> https://eservices.tn.gov.in<<>> என்ற இணையதளத்தில் ஒருங்கிணைந்த நில ஆவணமாகப் பெற்றுக்கொள்ளலாம்; இதற்காக மாவட்டம், வட்டம் மற்றும் புல எண் விவரங்களை உள்ளீடு செய்து, வங்கி மற்றும் அரசுத் தேவைகளுக்கான ஆவணங்களை எளிதாகப் பதிவிறக்கம் செய்யலாம். இந்த நல்ல தகவலை SHARE பண்ணுங்க!

News March 11, 2026

ஈரோட்டின் பழமையான பாலத்தை இடிக்க தடை!

image

ஈரோடு காரை வாய்க்கால் பகுதியில் காளிங்கராயன் வாய்க்காலில் பெரும்பள்ளம் ஓடைக்கு குறுக்கே 700 ஆண்டுகளுக்கு முன்பு தொட்டி பாலம் கட்டப்பட்டது. புதிய பாலம் கட்டுவதற்காக தொட்டி பாலத்தை இடிக்க முடிவு செய்யப்பட்டது. இதற்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்ததை தொடர்ந்து புராதன சின்னமான நீர்வழி பாலத்தை இடிக்கக்கூடாது என்று இந்திய தொல்பொருள் ஆய்வுக்கழகம் உத்தரவிட்டுள்ளது.

error: Content is protected !!