News March 8, 2026

சர்ச்சையில் அகமதாபாத் கிரிக்கெட் ஸ்டேடியம்!

image

இன்று WC T20I இறுதிப் போட்டி நடைபெறவுள்ள அகமதாபாத் ஸ்டேடியத்தில்தான், 2023-ம் ஆண்டின் WC ODI இறுதிப் போட்டியும் நடைபெற்றது. ஆனால், அப்போது இந்திய அணி தோற்றதை போல, இம்முறை நடந்து விடக்கூடாது என்பதற்காக மைதானத்தின் ஆடுகளம் மாற்றப்பட்டுள்ளதாக சர்ச்சை எழுந்துள்ளது. பேட்டிங்கில் சிறப்பாக செயல்படும் இந்திய அணிக்கு உதவும் வகையில் ஆடுகளம் பேட்டிங்கிற்கு ஏதுவாக மாற்றியமைக்கப்பட்டுள்ளதாம்.

Similar News

News April 4, 2026

திருச்சி – பாலக்காடு ரயில் புறப்படும் இடம் மாற்றம்

image

பொறியியல் பணிகள் காரணமாக திருச்சி – பாலக்காடு விரைவு ரயில் புறப்படும் இடம் மாற்றப்பட்டுள்ளது. இதுகுறித்து ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “திருச்சி – பாலக்காடு டவுன் விரைவு ரயிலானது வரும் ஏப்.10-ம் தேதி அன்று மட்டும், வழக்கமாக புறப்படும் இடமான திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்தை தவிர்த்து, திருச்சி கோட்டை ரயில் நிலையத்திலிருந்து மதியம் 1:12 மணிக்கு புறப்படும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News April 4, 2026

தங்கம் விலை சவரனுக்கு ₹15,000 குறைந்தது

image

போர்ச் சூழல் காரணமாக தங்கத்தின் விலை கடந்த 1 மாதமாக பெரும் சரிவை சந்தித்து வருகிறது. அந்த வகையில் மார்ச் 1 முதல் தற்போது வரை தங்கம் விலை சவரனுக்கு ₹15,000 வரை குறைந்துள்ளது. மார்ச் 1-ல் ₹1,26,200-க்கு விற்பனை செய்யப்பட்ட 1 சவரன் தங்கம், இன்றைய நிலவரப்படி ₹1,11,600-க்கு விற்பனையாகிறது. அதேநேரம், ஏப்ரல் தொடங்கிய பிறகு <<19562286>>தங்கம் விலை<<>> மெல்ல மெல்ல அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

News April 4, 2026

BREAKING: முடிவை மாற்றும் திருமாவளவன்?

image

சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் முடிவை திருமாவளவன் மறுபரிசீலனை செய்யவுள்ளதாக கூறப்படுகிறது. காட்டுமன்னார்கோவில் தொகுதியில் தானே களமிறங்குவதாக அவர் அறிவித்திருந்தார். ஆனால், தற்போதுவரை திருமாவளவன் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை. இந்நிலையில், அவருக்கு பதிலாக விசிக அமைப்புச் செயலாளர் இளமாறன் போட்டியிடலாம் என தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகலாம்.

error: Content is protected !!