News March 8, 2026

காய்கறிகள் விலை பாதியாக குறைந்தது!

image

வரத்து அதிகரிப்பால் சென்னை கோயம்பேடு சந்தையில் காய்கறிகள் விலை கடும் சரிவைக் கண்டுள்ளது. கடந்த சில நாள்களாக கிலோ ₹10-க்கு விற்பனையான தக்காளி அதிலும் பாதியாக குறைந்து இன்று 1 கிலோ ₹5-க்கு விற்பனையாகிறது. அதேபோல், 1 கிலோ வெங்காயம் ₹18, கேரட் ₹20, கத்திரிக்காய் ₹15, முருங்கைக்காய் ₹50 என காய்கறிகள் விலை கணிசமாக குறைந்துள்ளது. இந்த விலை சரிவு விவசாயிகளுக்கு வேதனையை கொடுத்துள்ளது.

Similar News

News March 16, 2026

திமுகவில்தான் உண்​மை​யான அதிமுக உள்ளது: தம்பிதுரை

image

திமுகவில் தற்போது அமைச்சர்களாக இருப்பவர்களில் பலரும் அதிமுக பாசறையில் பயிற்சி பெற்றவர்கள்தான் என தம்பிதுரை கூறியுள்ளார். கிருஷ்ணகிரியில் பேசிய அவர், அனிதா ராதாகிருஷ்ணன், ​முத்​து​சாமி, செந்தில்பாலாஜி, ரகுப​தி, சேகர்பாபு, EV வேலு என இவர்​கள் அனை​வ​ருமே அதிமுகவிலிருந்து சென்றவர்கள் தான் என்றும், உண்​மை​யான அதிமுக திமுகவில்தான் ஒரு பக்​கம் செயல்​பட்​டு கொண்​டிருக்​கிறது எனவும் விமர்சித்துள்ளார்.

News March 16, 2026

8 தொகுதிகளில் இடைத்தேர்தல்!

image

தமிழகம் உள்ளிட்ட 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தலுடன் கர்நாடகா, குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் 8 பேரவைத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெறவுள்ளன. மகாராஷ்டிராவில் பாராமதி (அஜித் பவாரின் தொகுதி), ரஹூரி, கோவாவின் பான்டா, கர்நாடகாவின் பாகல்காட், தவணகரே தெற்கு, நாகாலாந்தின் கொரிடாங், திரிபுராவின் தர்மாநகர், குஜராத்தின் உம்ரத் ஆகிய தொகுதிகளுக்கு ஏப்.9 & 23 ஆகிய தேதிகளில் இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது.

News March 16, 2026

எந்தெந்த மாநிலத்தில் யார் வெற்றி?.. கருத்துக்கணிப்பு

image

5 மாநிலங்களுக்கான புதிய தேர்தல் கருத்துக்கணிப்பை Times Now வெளியிட்டுள்ளது. அதில், அசாம் – BJP + 44% வாக்குகளுடன் 96-98 இடங்களிலும், CONG+ 40% வாக்குகளுடன் 26-28 இடங்களிலும், கேரளா – LDF 43% வாக்குகளுடன் 61-71 இடங்களிலும், UDF 42% வாக்குகளுடன் 58-69 இடங்களிலும், மேற்கு வங்கம் – TMC 45% வாக்குகளுடன் 155-170 இடங்களிலும், NDA 43% வாக்குகளுடன் 100-115 இடங்களிலும் வெற்றிபெறும் என தெரிய வந்துள்ளது.

error: Content is protected !!