News May 14, 2024
பலி எண்ணிக்கை 14ஆக உயர்வு

மும்பையில் ராட்சத பலகை விழுந்த விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 14ஆக உயர்ந்துள்ளது. அங்கு நேற்று வீசிய புழுதிப் புயலில் 100 அடி உயர விளம்பரப் பலகை விழுந்து விபத்துக்குள்ளானது. அதில் சுமார் 100க்கும் அதிகமானோர் காயமடைந்தனர். நேற்று இரவு 8 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்ட நிலையில், இன்று காலை நிலவரப்படி 14 பேர் உயிரிழந்துள்ளனர். 70க்கு மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Similar News
News March 17, 2026
அனைத்து ரேஷன் கார்டுகளுக்கும்.. ஹேப்பி நியூஸ்

ஜூன் மாதம் வரையிலான ஒதுக்கப்பட்ட உணவு தானியங்களை மாநிலங்கள் முன்கூட்டியே எடுத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கு உடனடியாக வழங்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. கோதுமை, அரிசி ஏப்.1 வரைக்குமான தேவைப்படும் கையிருப்பு அளவை விட சுமார் 185% அதிகமாக இருக்கிறது. அதிக அளவு தானியங்கள் இருப்பு உள்ளதாலும், அடுத்த சில வாரங்களில் புதிய கோதுமை கொள்முதல் தொடங்கும் என்பதாலும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது
News March 17, 2026
இலங்கையில் 4 நாள்கள் மட்டுமே வேலை நாள்கள்

போர் பதற்றத்தால் இலங்கையில் நிலவும் எரிபொருள் நெருக்கடியை சமாளிக்க புதன்கிழமை அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பள்ளி, கல்லூரி, அரசு அலுவலகங்களுக்கு 4 நாள்கள் மட்டுமே வேலை நாள்கள் ஆகும். அதேபோல், 2022-ல் ஏற்பட்ட எரிபொருள் நெருக்கடியின்போது கொண்டுவரப்பட்ட QR Code முறை மீண்டும் நடைமுறைக்கு வருகிறது. இதன்மூலம் பைக்குகளுக்கு வாரத்திற்கு 5 லிட்டர், கார்களுக்கு 15 லி மட்டுமே எரிபொருள் கிடைக்கும்.
News March 17, 2026
ஆதவ் அர்ஜுனா சொன்னது பொய்: ரஜினிகாந்த்

ஆதவ் அர்ஜுனா, சமீபத்தில் தன்னை <<19363014>>பற்றி கூறிய கருத்து<<>> உண்மைக்கு மாறானது என ரஜினி தெரிவித்துள்ளார். மேலும், தன்னை பற்றிய அவதூறு கருத்தை கண்டித்த EPS, நயினார், திருமாவளவன், அண்ணாமலை உள்ளிட்டோருக்கு நன்றி எனவும் குறிப்பிட்டுள்ளார். மேலும், ‘காலம் பேசாது ஆனால் காத்திருந்து பதில் சொல்லும்’ எனவும் தெரிவித்துள்ளார். முன்னதாக ஆதவ் அர்ஜுனாவை தவெகவில் இருந்து நீக்க விஜய்க்கு பலரும் அறிவுறுத்தியிருந்தார்.


